அய்யோ ஆண்டவா.. தெற்கு ஈரானில் பயங்கர நில நடுக்கம்.. 3 பேர் உயிரிழப்பு.. அலறி துடிக்கும் மக்கள்.

By Ezhilarasan Babu  |  First Published Jul 2, 2022, 11:15 AM IST

தெற்கு ஈரானில் ரிக்டர் அளவுகோலில் 6.0  ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்


தெற்கு ஈரானில் ரிக்டர் அளவுகோலில் 6.0  ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இதில் பலர் காயமடைந்திருப்பதாகவும் ஈரானிய அரசு ஊடகம் பதிவிட்டுள்ளது. ஹார்மோஸ்கான்  மாகாணத்திலுள்ள துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கு 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 19 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீட்பு பணிக்கு பிறகே தெரியவரும் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

தொய்வின்றி  மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதேபோன்ற நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. இந்த நடுக்கம் ஏற்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் 5.78  என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதுகுறித்து  ஹார்மோஜ் கான் ஆளுநர் மஸ்தி தோஸ்தி கூறுகையில் இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். அதிகாலையில் ஏற்பட்ட இந்த  நிலநடுக்கத்தில் அங்குள்ள பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வீதிக்கு ஓடி வந்தனர், நிலநடுக்கம் அந்நாட்டின் நேரப்படி அதிகாலை 1.30 மணி அளவில் ஏற்பட்டிருப்பதால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க கூடும்என அஞ்சப்படுகிறது. 
 

click me!