ஈரானில் நிலநடுக்கம்! - ஈரானில் 3பேர் பலி 19 பேர் படுகாயம்!

By Dinesh TGFirst Published Jul 2, 2022, 10:57 AM IST
Highlights

ஈரான் மற்றும் சீனாவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலியானதாகவும், 19பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

ஈரானின் தென்மேற்கில் உள்ள பந்தர்அப்பாஸ் நகரில் இருந்து 100 கி.மீ தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக ஈரான் அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள ஹர்மொஸ்கன் மகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும்பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


அய்யோ ஆண்டவா.. தெற்கு ஈரானில் பயங்கர நில நடுக்கம்.. 3 பேர் உயிரிழப்பு.. அலறி துடிக்கும் மக்கள்.


சீனாவில் நிலநடுக்கம்

மேலும், சீனாவின் ஜின் ஜியாங் மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக சீனாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து எந்த தகவல்களூம் வெளியாகவில்லை.

click me!