உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். உரையாடலின்போது இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் பல உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். உரையாடலின்போது இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் பல உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் உக்ரைனுக்கு எதிரான போரை கைவிட்டு ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியது.
இதையும் படியுங்கள்: அமித்ஷா இது தேவையா..? என் பேச்சை கேட்டிருந்தால்.. மகாராஷ்டிராவை பாஜக ஆண்டிருக்கலாம்.. குமுறும் உத்தவ்.
இந்தியா,ரஷ்யா நீண்டகால நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவுக்கு நெருக்கடிகள் ஏற்படும்போது ரஷ்யா தனது ஆதரவை இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன. அதே நேரத்தில் ஆசியக் கண்டத்தில் இந்தியாவுக்கு எதிராக சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில் இந்திய ராணுவத்திற்கான போர் தளவாடங்களை ரஷ்யா வழங்கி வருகிறது.
ரஷ்யாவிடம் போர் தளவாடங்களை வாங்க கூடாது என அமெரிக்கா பலமுறை இந்தியாவை நிர்பந்தித்து வந்தாலும் இருநாடுகளுக்குமான உறவு வலுவாக இருந்து வருகிறது. அதேநேரத்தில் உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்த நிலையிலும், இந்தியா அதில் நடுநிலைமை வகிப்பதாக அறிவித்தது.
இதையும் படியுங்கள்: பள்ளி வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள்? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு..!
இது ரஷ்யாவுக்கு பெருத்த ஆறுதலை ஏற்படுத்தியது. இந்நிலையில் குறைந்த விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. தேவையான கச்சா எண்ணெய்யை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இது அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதுதொடர்பான தகவலை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 2001 டிசம்பரில் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வருகை தந்த போது இரு நாடுகளுக்கும் இடையே எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், விவசாயம் உணவு மற்றும் மருந்து துறைகளில் தங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் எரிசக்தி மற்றும் உணவு சந்தை உள்ளிட்ட பல துறைகள் குறித்தும் இரு தலைவர்களும் உரையாடினர்.
இரு நாட்டுக்கும் இடையே விவசாய பொருட்கள், உரங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள், இரு தரப்பு வர்த்தகத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பரஸ்பர கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இரு நாட்டுக்கும் இடையிலான போரின்போது உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க ரஷ்யா மற்றும் உக்ரேன் என இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பேச்சுவார்த்தையின்போது சுமி உட்பட உக்ரைனில் சில பகுதிகளில் போர் நிறுத்தம் மற்றும் மனித வழித்தடம் உருவாக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பூட்டினை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். என்றும் தகவல்வெளியாகி உள்ளது.