இலங்கை நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், ஓட்டல்களில் வைக்க வெடிகுண்டுகளை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈஸ்டர் பண்கையையொட்டி, நேற்று இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் 3 தேவாலயங்கள் மற்றும் 4 நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதில் 5 இந்தியர்கள் உள்ளிட்ட 35 நாட்டினர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் 24 பேரை இதுவரை இலங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்றதாக வேன் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் மனித வெடிகுண்டு தாக்குதல் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள வேன் டிரைவர் உள்ளிட்ட 24 பேரும் நேஷனல் தவ்ஹீத் ஜமா அத் என்னும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.