கொரோனா பலியில் சீனாவை முந்திய ஸ்பெயின்... இத்தாலி, ஸ்பெயினை பதம் பார்க்கும் கொரோனா வைரஸ்!

By Asianet TamilFirst Published Mar 25, 2020, 8:39 PM IST
Highlights

சீனாவில் 3,281 பேர் உயிரிழந்துவிட்டார்கள். பலி எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இத்தாலி அந்த இடத்தைப் பிடித்தது. சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியில் பலி எண்ணிக்கையும் எகிறியது.
 

கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடத்தில் நீடித்துவரும் நிலையில், சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்துக்கு ஸ்பெயின் வந்துள்ளது.
சீனாவில் கிளம்பிய கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் பதைபதைக்க வைத்துள்ளது. சீனாவில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டன. சீனாவில் 3,281 பேர் உயிரிழந்துவிட்டார்கள். பலி எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இத்தாலி அந்த இடத்தைப் பிடித்தது. சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியில் பலி எண்ணிக்கையும் எகிறியது.
தற்போதைய நிலையில் இத்தாலியில் 6,820 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலி எண்ணிக்கையில் தொடர்ந்து இத்தாலி முதலிடத்தில் இருந்துவருகிறது. இரண்டாவது இடத்தில் சீனா இருந்துவந்தது. இந்நிலையில் அந்த இடத்துக்கு தற்போது ஸ்பெயின் வந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயிந்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் பலி எண்ணிக்கை அதிகரித்துவந்த நிலையில், இன்று சீனாவை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஸ்பெயினில் தற்போதைய நிலவரப்படி 3,434 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் ஸ்பெயினில் கொரோனாவால் 47,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

click me!