கொரோனா தொற்றில் மின்னல் வேகத்தில் பாகிஸ்தான்...!! 1000 பேருக்கு கொரோனா 7 பேர் உயிரிழப்பு..!!

By Ezhilarasan Babu  |  First Published Mar 25, 2020, 6:03 PM IST

பாகிஸ்தானில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு தகவல் தெரிவித்துள்ளது .


பாகிஸ்தானில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு தகவல் தெரிவித்துள்ளது .   இன்று காலை வெளியான பத்திரிக்கை செய்தியில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது கைபர் பக்துன்க்வா சுகாதார அமைச்சர் தைமூர் கான் ஜாக்ராவின் செய்தித்தொடர்பாளர் இத்தகவலை தெரிவித்துள்ளார் .  அதேபோல கைபர் பக்துன்க்காவில்  புதிதாக 39 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது  இதானால் அங்கு  கொரோனாவால் பாதித்துவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.  நேற்றைய முன்தினம் பலுசிஸ்தான் சிந்து இஸ்லாமாபாத் மற்றும்   கில்கிட்-பால்டிஸ்தானில் வைரஸ் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest Videos

இந்நிலைநில் பலுசிஸ்தான்  அரசு செய்தித்தொடர்பாளர் மாகாணத்தில்  புதிதாக 5 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார் மொத்தத்தில் பலுசிஸ்தானில் 115 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் சிந்தில் மூன்று பேரும்  கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத்தில் தல ஒருவருக்கும் புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  பாகிஸ்தானின் சிந்து மாகாணம் இதுவரையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமாக கருதப்படுகிறது.  இந்த மட்டும் சுமார்  413 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது .  

கைபர் பக்துன்க்வாவில்  78 பேருக்கும் , கில்கிட்-பால்டிஸ்தானில் சுமார் 81 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் பஞ்சாபில் 296  பேருக்கும் ஆசாத் ஜம்மு-காஷ்மீரில் 16 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தானில் இதுவரை வைரஸ் தொற்றுக்கு ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் செவ்வாய்க்கிழமை முதல் மரணம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .   அதேபோல ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பவும் சந்தேகத்துக்குரிய  யாத்ரீகர்களை பரிசோதிக்கும்படி மருத்துவ குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது அப்போது அவர்களை சோதனை செய்தலில் பலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் மூத்த உறுப்பினருமான , கொரோனா வைரஸிற்கான ஜிபி அரசாங்கத்தின் மைய நபருமான டாக்டர் ஷா ஜமான் தெரிவித்துள்ளார். 
 

click me!