ஒவ்வொரு மூன்று நாளைக்கும் வைரசின் வீரியம் கூடுகிறது.!! அமெரிக்கா வெளியிட்ட புதிய அதிர்ச்சி.., கதறும் ட்ரம்ப்.

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2020, 2:03 PM IST
Highlights

நியுயார்க் அதன் பெரு நகர பகுதிகளிலும் அதிகரித்து வரும் வைரஸ் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு 3 நாட்களுக்கும் வைரசின் தீவிரம் இரட்டிப்பாக்கி வருவதாக அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது .  அமெரிக்காவில் இதுவரை  700-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசுக்கு  உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . அமெரிக்காவில் அதன் தாக்கம் தற்போது தீவிரமாகி உள்ள இந்நிலையில் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூ மோ கொரோனா வைரசுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்துள்ளார் . 

ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் இந்த வைரஸ் தாக்கம் இரட்டிப்பாக்கி வருகிறது என்றும் இந்த வைரஸ் புல்லட் வேகத்தில் பரவிவருவதாகவும் ஆளுநர் கலக்கம் தெரிவித்துள்ளார் .  நியூயார்க்கில் மட்டும் சுமார் 25 ஆயிரத்து 665 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 271 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .  அதாவது சீனா மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடு என்ற இடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. கொரோனா  வைரஸ் தாக்குதல் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஜான் ஹாப்கின்ஸ் கூற்றுப்படி அமெரிக்காவில் மொத்தம் 55 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது . அமெரிக்காவில் மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . 

கடந்த செவ்வாய் அன்று மட்டும் அமெரிக்காவில் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது , அன்று ஒரே நாளில் 150 பேர் உயிரிழந்தனர் நியூயார்க்கில் 53 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர் ,  நியூயார்க்கில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர் .  அதாவது நியுயார்க் அதன் பெரு நகர பகுதிகளிலும் அதிகரித்து வரும் வைரஸ் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் இந்நிலையில் நகரத்தை விட்டு வெளியேறிய அனைவரும் வைரசிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளுமாறு அமெரிக்க கொரோனா வைரஸ் பரவல் கண்காணிக்கும் பணிக்குழு எச்சரித்துள்ளது . 

 

click me!