இத்தாலி மட்டுமல்லாது மத்திய தரைக் கடல் நாடுகள் முழுவதும் சுகாதார அதிகாரிகள் இரண்டு வார ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வந்தனர் .
இத்தாலியில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 743 ஆக அதிகரித்துள்ளது , மத்திய தரைக்கடல் நாடுகள் முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வரும் நிலையிலும் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதன . இது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . இந்த வைரசுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது .
இந்த வைரஸ் சீனாவில் தோன்றியிருந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இத்தாலியில் காட்டுத்தீயைவிட வேகமாக பரவி மனித உயிர்களை பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வந்தது . இந்நிலையில் நோய்த் தொற்றுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருந்தாலும் , அங்கு உயிர் இழப்பு என்பது குறைந்தபாடில்லை . இத்தாலி மட்டுமல்லாது மத்திய தரைக் கடல் நாடுகள் முழுவதும் சுகாதார அதிகாரிகள் இரண்டு வார ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வந்தனர் . இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று இத்தாலியில் பலி எண்ணிக்கை 601ஆக இருந்தது இந்நிலையில் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்துள்ளது கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி இத்தாலியில் முதல் உயிரிழப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது .
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முதல் 21 நாட்களுக்கு முழுஅடைப்பு நடத்த பாரதப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் , அவசியமில்லாமல் வெளியில் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிப்பு வெளியிட்ட மோடி கொரோனாவை எதிர்த்து போராட இந்தியர்கள் அரசு சொல்லும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் . இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது .