கொரோனாவிற்கு மருந்து ரெடி.. ஃப்ரான்ஸில் மேயரும் மனைவியும் பூரண சுகம்! 13 ஆண்டுக்கு முன்பே எழுதப்பட்ட கட்டுரை

By karthikeyan VFirst Published Mar 25, 2020, 11:21 AM IST
Highlights

கொரோனாவிற்கு ஃப்ரான்ஸ் மருத்துவர் பயன்படுத்திய மருந்தினால் ஃப்ரான்ஸின் நீஸ் நகர மேயர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் பூரண குணமடைந்துள்ளனர்.
 

சீனாவில் உருவான கொரோனா, உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால்,  தனிமைப்படுதலே அதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாக உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது. 

இந்நிலையில், ஃப்ரான்ஸ் மருத்துவரும் விஞ்ஞானியுமான டிடியர் ராவோல்ட் என்பவர் பயன்படுத்திய மருந்து, கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு, கொரோனாவிலிருந்து குணமடைய வைத்திருக்கிறது. 

ஃப்ரான்ஸின் அதி உயர் சபை விஞ்ஞானிகள் குழுவில் ஒருவரான இந்த மருத்துவர் ராவோல்ட், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஃபிரான்ஸின் நீஸ் நகர மேயர் கிறிஸ்டியானா எஸ்டோஸி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் க்ளோராகுயினுடன் சேர்த்து மலேரியா மாத்திரையான ஆண்டிபயோடிகாவையும் கலந்து கொடுத்திருக்கிறார். இந்த மருத்து நன்றாக வேலை செய்ததையடுத்து அவர்கள் இருவரும் பூரண குணமடைந்துள்ளனர். அதை நீஸ் நகர மேயரே தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த மருந்து மருத்துவத்துறையால் அங்கீகரிக்கப்படாததால் அதை பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்த மருந்திற்கு கியாரண்டி இல்லாததால் மருத்துவத்துறையிலேயே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

கொரோனா பாதித்த இருவரில் ஒருவருக்கு இந்த மருந்தை கொடுத்து பரிசோதித்துள்ளார் மருத்துவர் ராவோல்ட். அப்போது, இந்த மருந்து கொடுக்கப்பட்ட நபருக்கு கொரோனாவின் தாக்கம் 25% வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த மருந்து கொடுக்கப்படாத நபருக்கு 90% அப்படியே இருந்துள்ளது என்கிறார் அந்த மருத்துவர் ராவோல்ட். ஆனால் 100% இந்த மருந்து சரியானது என்று உறுதிப்படுத்தாததால் இதை பயன்படுத்த முடியவில்லை.

மருத்துவர் ராவோல்ட் க்ளோரோகுயினுடன் மலேரியா மருந்தையும் கலந்து பயன்படுத்திய தகவல் மருத்துவ துறையில் பரவ ஆரம்பித்ததையடுத்து, இதுகுறித்து அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பே கூட, கொரோனாவின் தாக்கத்தில் இந்த மருந்து கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார்.

மருத்துவர் ராவோல்ட், சாதாரண நபர் அல்ல. அதனால் அவரது கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. ஏனெனில் ஃப்ரான்ஸ் அதி உயர் சபை விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். ஃப்ரான்ஸ் உயிரியல் விஞ்ஞானி கூடத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் குழுவில் இவரும் ஒருவர். இந்த விஞ்ஞானிகள் குழு இதுவரை 250 ஆய்வுக்கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளது. 

இந்த மருந்து 100% சரியானது என்று நிரூபணமாகி மருத்துவத்துறை சிபாரிசு செய்தால்தான் இதை உலக மருத்துவர்கள் எழுத முடியும். அறிவியல் ஆய்வு முடிவு வராததால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகின்றனர். இதுவரை 800 பேருக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவை பொறுத்துத்தான் இந்த மருந்தை பயன்படுத்தமுடியும். 

மருத்துவர் ராவோல்ட்டின் இந்த மருந்தை மருத்துவ உலகம் ஏற்க தயங்கும் நிலையில், அவர் 13 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனாவிற்கு மலேரியா மாத்திரை பொருத்தமாக இருக்கும் என்று கட்டுரை எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறார். அந்த கட்டுரையில், மலேரியா மாத்திரையை பயன்படுத்தியதன்மூலம் கொரோனா வைரஸில் தளர்வு ஏற்படுவதாக தான் எழுதியிருந்ததாகவும், ஆனால் அந்த கட்டுரை மருத்துவ உலகில் போய் சேரவில்லை என்றும் கூறுகிறார். 

மேலும் கொரோனாவிற்கு மருந்து எதுவும் இல்லாத நிலையில், கொரோனாவின் தாக்கத்தில் தளர்வை ஏற்படுத்தும் இந்த மருந்தை பயன்படுத்த தயங்குவது குறித்து வருத்தப்படுகிறார். நான் பல்லாண்டுகளாக மருத்துவத்துறை சார்ந்த ஒரு விஷயத்தில் தான் ஆராய்ச்சி செய்து எனது பரிந்துரைக்கிறேனே தவிர, எனக்கு தொடர்பே இல்லாத ஒரு விஷயத்தை பற்றி சொல்லவில்லை என்றும் கூறுகிறார். எனவே அந்த மருந்து கொடுத்து பரிசோதிக்கப்படும் 800 பேர் குணமடைந்து அந்த முடிவு எந்த மாதிரி இருக்கிறது என்பதை பொறுத்துத்தான் இந்த மருந்தின் முடிவும்..
 

click me!