ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல... பீதியை கிளப்பும் உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை நிபுணர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 24, 2020, 7:25 PM IST
Highlights

உலக சுகாதார அமைப்பின் எமர்ஜென்சி நிபுணர் மைக்கேல் ரியான் வெளியீட்டுள்ள அதிரடி தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.49 லட்சத்தை கடந்துள்ளது. தனது கொடூர முகத்தை காட்டி வரும் கொரோனா என்ற அரக்கனிடம் இருந்து தப்பிக்க இந்தியாவில் 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதற்கும் ரெயில் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. 


இதற்கிடையே, தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமலானது. பொது மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் வரை பேருந்துகள், கால் டாக்ஸி, ஆட்டோ, லாரிகள் ஓடாது; அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியே வரலாம்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்...!

மக்களை வீடுகளில் இருக்க வைத்துவிட்டால், கொரோனா பரவால் தடுக்கப்பட்டு விடும் என உலகின் பல்வேறு நாடுகள் நினைத்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் எமர்ஜென்சி நிபுணர் மைக்கேல் ரியான் வெளியீட்டுள்ள அதிரடி தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 இதையும் படிங்க: 

“கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு வெறும் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்துவது மட்டுமே தீர்வாகாது. தொற்று நோய் ஏற்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பது தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும். ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறோம். சரியான விழிப்புணர்வு விதிகளைப் பின்பற்றாவிட்டால், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும். பொது சுகாதார விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமானது” என்று தெரிவித்துள்ளார். 

click me!