கோலாலம்பூர் விமானத்தில் பாம்பு… அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு!!

By Narendran S  |  First Published Feb 11, 2022, 7:12 PM IST

கோலாலம்பூரை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த ஏர் ஆசியா விமானத்தில் பாம்பு ஒன்று இருந்ததை அடுத்து அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கோலாலம்பூரை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த ஏர் ஆசியா விமானத்தில் பாம்பு ஒன்று இருந்ததை அடுத்து அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலாலம்பூரிலிருந்து தாவாவ்விற்கு நேற்றிரவு ஏர் ஆசியாவின் ஏர் பஸ் A 320 விமானம் சென்றது. பயணச் சேவையில் ஈடுபட்டிருந்த ஏர் ஆசியாவின் ஏர் பஸ் A 320 விமானத்திற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று பயணம் செய்துள்ளது.

Tap to resize

Latest Videos

பயணிகள் அமரும் இருக்கைக்கு மேலே உள்ள பகுதியில் அந்த பாம்பு ஊர்ந்துசென்றது. இதுத்தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து தாவாவில் தரையிறங்கவேண்டிய அந்த விமானம், பயணிகளின் பாதுகாப்பு கருதி கூச்சிங்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனை ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லியாங் டைன் லிங் உறுதிப்படுத்தினார். பயணிகளின் பாதுகாப்பைப் கருதி சாபாவின் தவாவ் நகருக்குச் செல்ல வேண்டிய விமானம் கூச்சிங்குக்கு திசை திருப்பட்டதாக ஏர் ஆசியா நிறுவனம் கூறியது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மிக அரிது என்று ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்தது. 

மேலும் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் கூடிய விரைவில் விமானம் தாவாவிற்குப் புறப்படும் என்றும் ஏர் ஏசிய நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த ஏர் ஆசியா விமானத்தில் பாம்பு ஒன்று இருந்ததை அடுத்து அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை விமானத்திற்குள் பணம் செலுத்தாமல் பயணம் செய்த விருந்தாளி என்று சமூக ஊடகவியலாளர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். 

click me!