தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து.. 20 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு.. 33 பேர் ரத்த வெள்ளத்தில் படுகாயம்.!

Published : Feb 11, 2022, 09:38 AM IST
தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து.. 20 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு.. 33 பேர் ரத்த வெள்ளத்தில் படுகாயம்.!

சுருக்கம்

பெரு நாட்டின் படாஸ் மாகாணத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமறாக சாலையில் ஓடியது. பின்னர், தலைக்குப்புற பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பெரு நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பெரு நாட்டின் படாஸ் மாகாணத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமறாக சாலையில் ஓடியது. பின்னர், தலைக்குப்புற பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், படுகாயமடைந்த 33 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயடைந்த 33 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!