Lata Mangeshkar: மெல்லிசை ராணியின் குரல் இனி நம் மனதை ஆளும்... பாக். அமைச்சர் இரங்கல்!!

By Narendran S  |  First Published Feb 6, 2022, 5:26 PM IST

இந்தியாவின் கானக்குயில், வானம்பாடி, பாலிவுட்டின் நைட்டிங்கேர்ள் என பல்வேறு பெருமைமிகு பெயர்களை பெற்ற லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் இரங்கல் தெரிவித்துள்ளார். 


இந்தியாவின் கானக்குயில், வானம்பாடி, பாலிவுட்டின் நைட்டிங்கேர்ள் என பல்வேறு பெருமைமிகு பெயர்களை பெற்ற லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கானக்குயில், வானம்பாடி, பாலிவுட்டின் நைட்டிங்கேர்ள் என பல்வேறு பெருமைமிகு பெயர்களை தாங்கிய லதா மங்கேஷ்கர், ஏறத்தாழ 70 ஆண்டுகாலம் இந்திய இசை ரசிக மனங்களைக் கட்டியாண்டார். அந்த குரல் இன்று தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. குடும்ப வறுமை காரணமாக 13 வயதிலேயே பாடகியாக உருவெடுத்த அவர், இதுவரை தமிழ், இந்தி, பெங்காலி, மலையாளம் என 36  மொழிகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனையும் படைத்தார்.

Tap to resize

Latest Videos

தன் பெயரை தவிர்த்துவிட்டு இந்திய சினிமா வரலாறை உங்களால் எழுதவே முடியாது என்ற நிலையை உருவாக்கியவர் லதா மங்கேஷ்கர். இந்திய இசை ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த அவரது குரல் இன்றோடு இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது. கடந்த சில நாட்களாகவே அவர் முதுமைக்கால நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதோடு கொரோனா தொற்றும் இணைந்துகொள்ள நிலைமை மேலும் மோசமடைந்தது.

 

A legend is no more, was a melodious queen who ruled the world of music for decades she was uncrowned queen of music her voice shall keep ruling the Hearts of people for all times to come

— Ch Fawad Hussain (@fawadchaudhry)

அவரின் மறைவு அனைத்து தரப்பினரின் மனதையும் உலுக்கியுள்ளது. அவருக்கு பிரதமர் மோடி, அரசியல் கட்சி தலைவர்கள், பாடகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைனும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது ட்விட்டர் பதிவில், லதாமங்கேஷ்கர் எனும் மெல்லிசை ராணி பல தசாப்தங்களாக இசை உலகை கட்டி ஆண்டவர். இசையின் முடிசூடா ராணி என்றால் அவர் தான். இப்படிப்பட்ட ஒரு தலைசிறந்த லெஜண்ட் பாடகி இப்போது நம்முடன் இல்லை. இருந்தாலும் கூட அவரது குரல் இனி வரும் காலங்களில் மக்களின் இதயங்களை கட்டியாளும் என்பதில் சந்தேகமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

click me!