Valluvar Way: உலக அரங்கில் தமிழர் பெருமை..வள்ளுவருக்கு மீண்டும் கவுரவம்..அமெரிக்காவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி..

By Thanalakshmi V  |  First Published Feb 5, 2022, 4:10 PM IST

அமெரிக்காவில் முதன்முறையாக சாலை ஒன்றிற்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட உள்ளது. விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் பகுதியில் இருக்கும் சாலைக்கு வள்ளுவர் தெரு என்று பெயரிடப்பட உள்ளது.
 


அமெரிக்காவில் முதன்முறையாக சாலை ஒன்றிற்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட உள்ளது. விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் பகுதியில் இருக்கும் சாலைக்கு வள்ளுவர் தெரு என்று பெயரிடப்பட உள்ளது.

அழியாத ஒளி விளக்காக திருக்குறள் காலத்தும் நின்று வள்ளுவன் புகழை பாடும். வாழ்க்கைக்கு தேவையான நன்னெறிகளை போதிக்கும் நன்னூலாக போற்றப்படும் திருக்குறள் உலக பொதுமறையாக கொண்டாடப்படுகிறது. 2 அடி கொண்ட 1330 குறள்களில் அனைத்தையும் சொல்லிவிட்டு என்றுள்ளார் திருவள்ளுவர். 

Tap to resize

Latest Videos

அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் தமிழக அரசு சார்பில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தில் பல்வேறு கல்லூரி, பல்கலைகழகம், சாலைகள் உள்ளிடவற்றிற்கு வள்ளூவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு தெருவிற்கு சூட்டப்பட இருக்கிறது. வெர்ஜினியாவில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் இந்த தெரு அமையவிருக்கிறது. ஆங்கிலத்தில் 'Valluvar Way' என்றும் தமிழில் 'வள்ளுவர் தெரு' என்றும் இந்த தெரு அழைக்கப்படும். இந்த அறிவிப்பை வெர்ஜினியா சபை உறுப்பினர் டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.  திருவள்ளுவரின் திருக்குறள் புகழ் உலகப் புகழ்பெற்ற இருந்தாலும் அவரது பெயரில் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தெரு அழைக்கப்பட இருப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.

click me!