பாக். பிரதமரின் சீனா பயணம் நிறைவு… ஆப்கான். நிதியுதவியை விடுவிக்க பாக்., - சீனா வேண்டுகோள்!!

By Narendran S  |  First Published Feb 6, 2022, 11:12 PM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சீனப் பயணம் முடிவடைந்ததை அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியைத் தொடருமாறு சர்வதேச சமூகத்தை இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டு அதன் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சீனப் பயணம் முடிவடைந்ததை அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியைத் தொடருமாறு சர்வதேச சமூகத்தை இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டு அதன் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் வரை 3,000 கி.மீ. தொலைவுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை சீனா மேற்கொண்டுள்ளது. சுமாா் ரூ.4.49 லட்சம் கோடி செலவில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாக செல்லும் இந்தத் திட்டத்துக்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், குளிா்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காகவும், சீனாவின் அரசு உயரதிகாரிகளைச் சந்திப்பதற்காகவும் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் 4 நாள் பயணமாக கடந்த 3 ஆம் தேதி சீனா சென்றார். அவருடன் பாகிஸ்தான் அரசின் முக்கியத் துறைகளின் அமைச்சா்களும் சென்றனர். பெய்ஜிங்கில் சீனாவின் தேசிய மேம்பாடு, சீா்திருத்த ஆணையத்தின் தலைவா் ஹீ லிஃபங்கை இம்ரான் கான் கடந்த 4 ஆம் தேதி காணொலி முறையில் சந்தித்துப் பேசினாா். அப்போது பாகிஸ்தானில் சீன முதலீடுகளை அதிகரிப்பது குறித்து இருவரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதைத் தொடா்ந்து, பொருளாதார வழித்தடத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தில் இம்ரான் கானும் பாகிஸ்தான் முதலீட்டுத் துறை அமைச்சருமான முகமது அஸ்ஃபாா் ஆசனும் கையொப்பமிட்டனா். அந்நிய நேரடி முதலீட்டைக் கவா்வது, தொழில் வளா்ச்சியை ஊக்கப்படுத்துவது, பொருளாதார மண்டலங்களை மேம்படுத்துவது, அரசு மற்றும் தனியாா் துறைகளில் திட்டங்களைத் தொடங்குவது, கண்காணிப்பது, நிறைவேற்றுவது ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இதை அடுத்து இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சீனப் பயணம் முடிவடைந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நிதியுதவியை விடுவிக்குமாறு இரு நாடுகளும் மீண்டும் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ள. அதில் இரு நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியைத் தொடருமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொண்டுள்ளன. 

click me!