'ஸ்பெக்ட்ரோனிக்’ நிறுவனத்தின் ஹைட்ரஜன் எரிபொருள் கொண்ட ‘குருசர்’ வாகனத்துடன் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜொக்ஜமான் ஜாப், தலைமைச் செயலாக்க அதிகாரி ஸார்லி மாவுங் நகரை வலம் வந்தனர்.
சிங்கப்பூரில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் முதல் இலகு ரக வாகனத்தை, ஜேடிசி ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சிறு லாரி போன்ற வாகனத்தில் ‘ஸ்பெக்ட்ரோனிக்’ நிறுவனத்தின் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த லாரியில், ஒரு ட்ட வரையிலான எடையும் கொண்டு செல்லலால்ம. மேலும் 500 கிலோமீட்டர் தூரம் வரை ஓடும் திறன் பெற்றது. அது அதிவேகமாக மணிக்கு 44 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. ஐந்து நிமிடங்களில் அதில் எரிபொருள் நிரப்பப் முடியும்.
ஹைட்ரஜன் எரிபொருளின் மின்கலன், காற்றழுத்தப்பட்ட கலனுக்குள் உள்ள ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டும் காற்றில் உள்ள ஆக்ஸிடன் கொண்டும் ரசாயன முறைப்படி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் தொடர்பில் நடத்தப்படும் இரண்டாவது மிகப் பெரிய சோதனை இதுவாகும்,மெர்சிடிஸ் பென்ஸ் A-வகை சிறிய கார்களில் எரிபொருள் மின்கல மின்சாரம் பொருத்தப்பட்டிருந்தபோது அது சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அவை கோஸ்ட் ரோட்டில் உள்ள பிபி (BP) பெட்ரோல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் சாவடியில் எரிபொருளை நிரப்பின. அத்தொழில்நுட்பத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருந்ததால் அது கைவிடப்பட்டது.
இருப்பினும், இந்தத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட பல்வேறு வளர்ந்த நாடுகள், தூய்மை எரிசக்தித் திட்டமாக தங்கள் நாடுகளில் அவற்றை மேற்கொண்டுள்ளன. ஹியுண்டே, பிஎம்டபுள்யூ, டோயோட்டா முதலிய நிறுவனங்கள் தங்கள் சிறிய வாகனங்களுக்கு எரிபொருள் மின்கல மின்சாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ஸ்பெக்ட்ரோனிக்’ நிறவனம், தனது லாரியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள தானியங்கி வாகனங்களுக்கான ஆய்வு சோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுளத்து. அதன் பாதுகாப்புத்தன்மை வெற்றிகரமான சோதித்து பார்க்கப்பட்ட பின்னர், அது ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள ஜேடிசி கிளீன்டெக் பூங்காவின் சாலைகளில் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
லாரியில் உள்ள ஹைட்ரஜன் கலங்கள் காலியானவுடன், பேட்டரியை போன்று அவற்றுக்குப் பதிலாக புதிய கலன்கள் மாற்றப்படும். மேலும் ஸ்பெக்ட்ரோனிக் நிறுவனம் உணவு, டெலிவெரி விநியோகத்தில் ஈடுபடும் சிறிய வாகனங்களிலும் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களைப் பொருத்துவது குறித்து பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் வீடுகளின் விலை வீழ்ச்சி; காரணங்கள் என்னென்ன?
“இந்தச் சோதனைத் திட்டத்தின் மூலம் ஹைட்ரஜன் எரிபொருளைப் பயன்படுத்தி வர்த்தக வாகனத்தின் நம்பகத்தன்மையை ஒரு டன் எடை கொண்ட லாரி ஏற்படுத்தும்,” என ‘ஸ்பெக்ட்ரோனிக்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜொக்ஜமான் ஜாப் தெரிவித்தார்.
மின்கல மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாகனங்களைவிட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களைப் பயன்படுத்தும் வாகனங்கள் எளிதில அதிக தூரத்தைக் கடக்க முடியும் என்றும், மேலும் மின்கல மின்சார வாகனங்கள் வெளியாக்கும் புகை வெளியேற்றத்தைவிட, ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல வாகனங்கள் புகையை வெளியாக்காது என்றும் ஜாப் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தொடங்கும், உலகளாவிய தோல் மருத்துவ மாநாடு! 11000 பேர் பங்கேற்பு!
“ஸ்பெக்ட்ரோனிக்'' நிறுவனத்தின் ஹைட்ரஜன் எரிபொருள் வாகன சோதனை முறை, அடுத்த நிலை வாகன முறை தீர்வுகளுக்கு ஒரு புதிய மைல்கல் என்று ஜேடிசி வாகன உற்பத்தி, போக்குவரத்துக் குழுமத்தின் இயக்குநர் அனில் தாஸ் தெரிவித்தார்.