இனி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குப்பை வீசினால் அவர் குற்றவாளி.. சிங்கப்பூரில் புதிய விதி அமல்..

By Ramya s  |  First Published Jul 3, 2023, 3:13 PM IST

சிங்கப்பூரில், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்கள் அல்லது வாடகைதாரர்கள் அதிக அளவில் குப்பைகளை வீசினால் குற்றவாளிகளாக கருதப்படுவர்.


சிங்கப்பூரில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து குப்பைகளை வீசுவது குற்றச்செயலாகும். சுற்றுச்சூழல் பொது சுகாதாரச் சட்டம் 1987 (EPHA) இன் கீழ், குடியிருப்புகளில் இருந்து குப்பை கொட்டுவது பிரிவு 17(1) இன் கீழ் குற்றமாகும். ஜூலை 1,முதல் இந்த புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய விதியின் படி, ஏதேனும் ஒரு பொது இடத்தில் குப்பை கொட்டும் செயல் நடந்தால், பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் (அல்லது முழு குடியிருப்பு பிளாட் குத்தகைக்கு விடப்பட்ட யூனிட்டின் குத்தகைதாரர்கள்) அந்த குற்றத்தை செய்ததாகக் கருதப்படும்.

அடுக்குமாடி குடியிர்ப்பின் பால்கனி அல்லது ஜன்னல் போன்ற இடத்தில் இருந்து, குப்பைகளை வீசக்கூடது.. டிஸ்யூ பேப்பர், சிற்றுண்டி ரேப்பர்கள், எரியும் சிகரெட் , கண்ணாடி பீர் பாட்டில்கள் மற்றும் பூந்தொட்டிகள் போன்ற ஆபத்தான பொருட்கள் வரை மேலே இருந்து வீசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த புதிய விதியை சிங்கப்பூர் அரசு அமல்படுத்தி உள்ளது

Latest Videos

undefined

சிங்கப்பூரில் ஆண் நண்பருக்கு பாலியல் வன்கொடுமை: 12 கசையடி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து இதுபோன்ற குப்பைகளை வீசுவதால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது மற்றும் பொது சுகாதாரத்தை அச்சுறுத்துகிறது. குப்பை கொட்டும் எந்தவொரு தனிநபருக்கும் நீதிமன்றத் அபராதம் விதிக்கப்படும். அதன்படி முதல்முறை குற்றம் செய்தால், $2,000, இரண்டாவது தண்டனைக்கு $4,000 மற்றும் மூன்றாவது மற்றும் அதற்குப் பிறகு விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படும். குற்றவாளிகள் பொது இடங்களை 12 மணி நேரம் வரை சுத்தம் செய்ய வேண்டும் என்ற வேலை ஆணையையும் நீதிமன்றம் விதிக்கலாம்.

எனினும் 14 நாட்கள் காலக்கெடுவில், குற்றத்தின் போது தாங்கள் அந்த குடியிருப்பில் இல்லை அல்லது குற்றவாளியாக இருக்க முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், கால அவகாசம் முடிந்த பிறகு, குற்றவாளியாக கருதப்படும் நபருக்கு சம்மன் அனுப்பப்படும். 

2020 முதல் 2022 வரை, ஆண்டுதோறும் சராசரியாக 31,200 உயரமான குப்பைகளைக் கொட்டும் நிகழ்வுகளை சிங்கப்பூர் அரசின், தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் செய்தது. இது 2017 முதல் 2019 வரை ஆண்டுதோறும் சராசரியாக 19,100 நிகழ்வுகளுடன் ஒப்பிடும் போது, சுமார் 64 சதவீதம் அதிகமாகும். அதே காலகட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக 2,600 கேமராக்களை நிலைநிறுத்தியது, மேலும் இதுதொடர்பான குற்றங்களில் பிடிபட்ட நபர்களுக்கு எதிராக ஆண்டுதோறும் சுமார் 1,600 அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

சிங்கப்பூரில் வீடுகளின் விலை வீழ்ச்சி; காரணங்கள் என்னென்ன?

click me!