சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் ரதி கார்த்திகேசு காலமானார்..

By Ramya s  |  First Published Aug 12, 2023, 12:53 PM IST

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் ரதி கார்த்திகேசு தனது 87ஆவது வயதில் காலமானார்


சிங்கப்பூரின் பிரபல பரதநாட்டிய நடன கலைஞர் ரதி கார்த்திகேசு காலமானார். அவருக்கு வயது 87. சிங்கப்பூரில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்த பரதநாட்டிய நடனக் கலைஞரான ரதி கார்த்திகேசுவின் மகன் வழக்கறிஞர் ஆனந்த் கார்த்திகேசு ஆவார்.. ரதி கார்த்திகேசு சிங்கப்பூரின் உயர்மட்ட மேல்முறையீட்டு நீதிபதிகளில் ஒருவரான மூட்டாம்பி கார்த்திகேசுவை மணந்தார், அவர் 1999 ல் தனது 75 வயதில் இறந்தார். தனது கணவர் இறந்த சில வாரங்களுக்குப் பிறகு தனது மகள் ஷர்மினியை (39) அவர் இழந்தார். இவரது மகன் சுரேஷ் 2006ல் தனது 48வது வயதில் இறந்தார்.

முன்னாள் மூத்த அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான தர்மன் சண்முகரத்தினத்தின் அத்தை தான் ரதி கார்த்திகேசு. இவரது சகோதரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வதுரை ஆவார், அவர் 2001 ஆம் ஆண்டு தி சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பாரம்பரிய இந்திய கலைகளை ஊக்குவிப்பதில் தனது ஆர்வத்தை வடிவமைப்பதில் அவரது செல்வாக்கை மேற்கோள் காட்டினார்.

Tap to resize

Latest Videos

சிங்கப்பூரில் இந்திய நடன கலைகளை நிறுவியதில் கார்த்திகேசு ஒரு முன்னோடியாகக் கருதப்பட்டார். சிங்கப்பூர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் (சிஃபாஸ்) தலைவராகவும் ரதி கார்த்திகேசு இருந்தார். சிங்கப்பூர், ஸ்ருதிலயா ஸ்கூல் ஆஃப் டான்ஸ் இயக்குநர் காயத்ரி ஸ்ரீராம், 1995-96 ஆம் ஆண்டில் கார்த்திகேசுவைச் சந்தித்ததாகவும், இருவரும் பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் இருவரும் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்.

"சிங்கப்பூரில் உள்ள இந்திய நடன சமூகத்தில் ரதி கார்த்திகேசுவின் பங்களிப்பு மற்றும் தாக்கம் அளவிட முடியாதது" என்று ஸ்ரீராம் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். மேலும் "பெண்கள், குறிப்பாக திருமணமானவர்கள், பரதநாட்டியக் காட்சியில் தொழில்முறை கலைஞர்களாக கருதப்படாத நேரத்தில் ரதி கார்த்திகேசு நடனமாடத் தொடங்கினார். திருமணத்திற்குப் பிறகும் நடனம் ஆடி, நம்மில் பலருக்கு அடையாளமாக மாறினார். மேலும் அவர் வாழ்க்கையில் பல தனிப்பட்ட கலைஞர்களை வளர்த்தெடுத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய நடன நிறுவனமான அப்சரஸ் ஆர்ட்ஸின் கலை இயக்குனர் அரவிந்த் குமாரசாமி இதுகுறித்து பேசிய போது, “ ரதி கார்த்திகேசு பல்வேறு இந்திய பாரம்பரிய கலைகள், குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன வடிவங்களைப் படித்த ஒரு மூத்த கலைஞர். அவர் சிங்கப்பூரில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தினார். 2007 ஆம் ஆண்டில், அப்போதைய தகவல், தொடர்பு மற்றும் கலை அமைச்சராக இருந்த டாக்டர் லீ பூன் யாங், பாரம்பரிய விருது வழங்கும் விழாவில் கார்த்திகேசுவின் தொண்டு முயற்சிகளை எடுத்துரைத்தார்.

1950 களில் பிரபல பாரம்பரிய இந்திய நடனக் கலைஞரான திருமதி ரதி கார்த்திகேசு, சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்திற்கு நடன போஸில் அரிய இந்திய சிற்பங்களின் தொகுப்பை வழங்கியுள்ளார். அவரது பங்களிப்பு நிச்சயமாக அருங்காட்சியகத்தின் சேகரிப்பு மற்றும் கண்காட்சிகளுக்கு மிகவும் பிரகாசத்தை சேர்க்கும், ”என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா வளாகத்தில் உள்ள ஜோதி ஸ்டோர் மற்றும் ஃப்ளவர் ஷாப் உரிமையாளர் ராஜகுமார் சந்திரா, கூறுகையில், " ரதி கார்த்திகேசு மிகவும் குறிப்பிடத்தக்க, வலிமையான மற்றும் சுதந்திரமான பெண்மணி, மேலும் கோவில்களுக்கு தொடர்ந்து உணவு நன்கொடைகள் செய்யும் பக்தியுள்ள பெண்மனி” என்று தெரிவித்துள்ளார்.

Singapore : செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. யார் யார் களத்தில் இருக்கிறார்கள்?

click me!