சாக்லேட் என்பது உலக அளவில் பல கோடி மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாக்லேட்கள் பல வகையான நிறங்கள் மற்றும் சுகைகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர், தான் எப்பொழுதும் விரும்பி சாப்பிடும் ப்ரூட் அண்ட் நட் சாக்லேட் ஒன்றை வாங்கி அதை சுவைக்க எண்ணி அந்த சாக்லேட்டை கடித்துள்ளார். அப்பொழுது அதன் உள்ளே ஏதோ ஒரு மர்மமான பொருள் இருப்பதை உணர்ந்த அவர் அதை தனியே எடுத்து வைத்துவிட்டு அது என்னவென்று ஆராய துவங்கியுள்ளார்.
அவர் அந்த சாக்லேட்டுக்குள் இருந்த பொருளை கூர்மையாக உற்று நோக்கிய போது தான் அவர் உடலே வெலவெலத்து போகும் அளவிற்கு ஒரு விஷயம் நடந்துள்ளது. அந்த சாக்லேட்டுக்குள் இருந்தது ஒரு மனித விரல். அந்தப் பெண் இலங்கையில் உள்ள மஹியங்கனயா என்ற மருத்துவமனையில் பணி செய்து வருகிறார்.
சிறுவர்களின் ஆபாசப் படம் எடுத்து அனுப்ப பணம் கொடுத்த பிரிட்டன் ஆசிரியருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை!
அந்த மருத்துவமனையின் கேண்டினில் இருந்து தான் அந்த சாக்லேட்டை அவர் வாங்கினார் என்றும் தெரிவித்துள்ளார். அந்த சாக்லேட்டை கடிக்க துவங்கிய அவர், தனது வாயில் ஏதோ ஒன்று தென்பட்டதை கண்டுள்ளார். ஆனால் அது கடிக்க முடியாத அளவில் இருந்ததால், அது என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அதை தண்ணீரில் அலசி பார்த்து உள்ளார்.
அப்பொழுதுதான் அது ஒரு மனிதனின் விரல் என்று தெரியவந்துள்ளது, உடனடியாக அந்த மருத்துவமனை அதிகாரிகளும், அந்த பெண்ணும் இலங்கையை அரசின் சுகாதார துறைக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். தகவல் இருந்து வந்த பொது சுகாதார ஆய்வாளர்கள் அந்த குறிப்பிட்ட சாக்லேட் கம்பெனி தயாரிக்கும் பொருட்களை அந்த கேண்டில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளில் இருந்தும் குறிப்பிட்ட அந்த வகையை சார்ந்த சாக்லேட்டுகளை விற்பனை செய்ய தடையும் விதித்துள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள் இந்த சம்பவம் குறித்து அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.