செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தில் தண்ணீர் இருந்திருக்கும்... நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஆதாரம்!

By SG Balan  |  First Published Aug 12, 2023, 9:09 AM IST

இந்தக் கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழக்கூடிய உலகமாக இருந்திருக்கும் என்பதைத் தெளிவாக விளக்குகிறது என்று பேட்ரிக் காஸ்டா குறிப்பிடுகிறார்.


நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் எடுத்த படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் வறண்ட மற்றும் ஈரப்பதம் மிக்க பருவ காலங்கள் சுழற்சி முறையில் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாக செவ்வாய் கிரகத்தில் சிறிது காலத்திற்கு மனிதர்கள் வாழக்கூடிய அளவு நீர் இருந்திருக்கலாம், பின்னர் அந்த நீர் ஆவியாகி மண்ணில் பிளவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் என்றும் நாசா கூறுகிறது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படும் மண் விரிசல்கள் வறண்ட - ஈரப்பதமான பருவகாலங்களின் சுழற்சிகள் நடந்திருப்பதைக் காட்டுகின்றன என்று  நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. மண்ணில் உள்ள விரிசல்கள் பருவகால சுழற்சி அல்லது திடீர் வெள்ளம் காரணமாக உருவாகி இருக்கலாம். இந்த விரிசல்களில் உள்ள Y-வடிவம் பூமியில் காணப்படுவதைப் போல இல்லாமல், வேறுபட்டிருக்கிறது எனவும் ஆய்வு குறிப்பிடுகிறது.

Tap to resize

Latest Videos

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த விஷயத்தில் உஷாரா இருக்கணும்!

2011இல் ஏவப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் பள்ளத்தை ஆய்வு செய்து வருகிறது. கேல் பள்ளம் செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் ஏரி இருந்த இடம் என்று நம்பப்படுகிறது. அந்தப் பள்ளத்தின் நடுவில் கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் உயரத்தில் ஒரு பெரிய வண்டல் மலை உள்ளது.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் மற்றும் பரந்த ஏரிகள் இருந்துள்ளன. விஞ்ஞானிகள் இந்த நீர்நிலைகளின் அடையாளங்களைக் கண்டுபிடித்தனர். ஆனால் அவை எந்தக் காலநிலையைச் சேர்ந்தவை என்று உறுதியாக தெரியவில்லை. 2021ஆம் ஆண்டில், கியூரியாசிட்டி ரோவர் எடுத்த படத்தில் வண்டல் மலையின் உலர்ந்த சேற்றில் அறுகோண வடிவில் உப்பு படிவுகள் இருப்பது தெரியவந்தது.

சந்திரயான்-3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய படங்களை வெளியிட்டது இஸ்ரோ!

"மண் விரிசல்களின் மூலம் செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்து, பின் காணாமல் போயிருக்கலாம் என்ற கணிக்க முடிகிறது. செவ்வாய் கிரகம் எத்தகைய குளிர்ந்த, வறண்ட பருவகாலங்களைக் கொண்டிருந்தது என்று இன்று நமக்குத் எப்படி தெரியும்?" என கியூரியாசிட்டி ரோவரில் உள்ள கெம்கேம் (ChemCam) கருவியின் முதன்மை ஆய்வாளர் நினா லான்சா கூறுகிறார். "செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் குறைவாக இருந்திருக்கும் என்பதை இந்த மண் விரிசல்கள் நமக்குக் காட்டுகின்றன" எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த காலங்களில் செவ்வாய் கிரகத்தில் ஈரமான காலநிலையும், உயிர்கள் உருவாவதற்கு ஏற்ற சூழ்நிலையும் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வறண்ட மற்றும் குளிர்ந்த பருவகாலங்கள் அங்கு உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான கரிம மூலக்கூறுகளை உருவாக்குவதற்கு வழிவகுத்திருக்கலாம் என்று ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான பேட்ரிக் காஸ்டா கூறுகிறார். இந்தக் கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழக்கூடிய உலகமாக இருந்திருக்கும் என்பதைத் தெளிவாக விளக்குகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

விக்ரம் லேண்டர் எஞ்சின் செயலிழந்தாலும் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும்! இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்

click me!