வேலை-வாழ்க்கை சமநிலையில் சிங்கப்பூர் பணக்காரர்கள் மகிழ்ச்சியற்றவர்கள் என்று ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜெனிவாவை மையமாகக் கொண்ட தனியார் வங்கி ஒன்று, வேலை - வாழ்க்கை சமநிலை தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள பணக்காரர்களை ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் பணக்காரர்கள் தற்போதைய வேலை - வாழ்க்கை சமநிலையில் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் பணக்காரர்கள் மகிழ்ச்சி அளவில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சுவிட்சர்லாந்தின் "பாங்க் லொம்பார்ட் ஒடியே அண்ட் சியே" (Banque Lombard Odier & Cie) வங்கி நடத்திய ஆய்வில் இது குறிப்பிடப்பட்ட்டுள்ளது. மேலும் சிங்கப்பூர் பணக்காரர்கள் தங்களின் வேலையில் அதிக நேரம் செலவிடுவதால் மகிழ்ச்சியில் பின்தங்கியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
வேலை-வாழ்க்கை சமநிலை அய்வின் படி 72.7% சதவீதத்துடன் தரவரிசையில் தாய்லாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள 10 நாடுகளிலேயே சிங்கப்பூரில்தான் வாரத்திற்கு 45 மணி நேரம் கூடுதலாக வேலை செய்ய வேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேர்த்துவைத்த மொத்தமும் போச்சு.. ஆன்லைன் மோசடியில் சிக்கிய முதியவர் - சிங்கப்பூரர்களே ஜாக்கிரதையா இருங்க!
ஆசியாவின் பெரும் பணப் பரிமாற்றத்திற்கு மத்தியில் இளைய தலைமுறையினர் "வேலையே வாழ்க்கை / வாழ்க்கையே வேலை" என்ற மனநிலையிலிருந்து விலகிச் செல்லும் நிலை அதிகரித்து வருகிறது என்றும் சுவிட்சர்லாந்தின் லொம்பார்ட் நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, தைவான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக லாபம் ஈட்டும் பணக்காரர்களில் 460க்கும் மேற்பட்டோரிடம் வேலை/வாழ்க்கை சமநிலை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
சிங்கப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு! கடந்த ஆண்டை விட 5% அதிகரிப்பு!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D