அங்கு கடைகள் வைத்திருப்பவர்களுக்கு தற்காலிகமாக வேறு இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றும், சிங்கப்பூரின் NEA தெரிவித்துள்ளது.
எப்போதும் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் சிங்கப்பூரில், அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் அளவில் விறுவிறுப்பாக செயல்பட்டு வந்த ஒரு இடம் தான் தேக்கா மார்க்கெட் மற்றும் உணவு கூடம். தற்பொழுது கடந்த சில நாட்களாகவே இந்த பகுதி மிக மிக அமைதியாக காட்சியளிக்கிறது, அதற்கு காரணம் தற்போது தேக்கா மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, மறு சீரமைப்பு பணிகள் அங்கு நடந்து வருவதால் எதிர்வரும் சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக மார்க்கெட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு தற்காலிகமாக வேறு இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றும், சிங்கப்பூரின் NEA அழைக்கப்படும் நேஷனல் என்விரான்மென்டல் ஏஜென்சி தெரிவித்துள்ளது. கேம்பிரிட் சாலை, ஸ்மித் சாலை போன்ற அருகில் உள்ள சில இடங்களுக்கு கடைகள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அவர்கள் மார்க்கெட்டுக்கு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இனி TAX.. சிலர் செய்த சில்மிஷத்தால் கொஞ்சம் கடுப்பான Bali அரசு!
கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி இதற்கான பணிகள் துவங்கிய நிலையில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை ஒரு கட்டமாகவும், செப்டம்பர் 30ம் தேதி வரை ஒரு கட்டமாகவும் இது சீரமைக்கப்படுகிறது. இறுதியாக கடந்த 2017ம் ஆண்டு 284 மார்க்கெட் ஸ்டால்களும், 119 சிறு வியாபாரிகளுக்கான கடைகளும் அங்கு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு உள்ள ஒரு உணவு கூடத்திற்கு புகை போக்கி அம்சங்களும் கடந்த 2017ம் ஆண்டு பொருத்தப்பட்டது.
சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து திரும்பவும் மறு சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் மார்க்கெட்டில் செய்து வருகின்றனர். தேக்கா மார்க்கெட்டை பொறுத்தவை பல தமிழர்கள் அங்கு கடை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் உள்பட வெளிநாட்டில் இருந்து வந்து அங்கு கடை வைத்திருக்கும் சில கடைக்காரர்கள் இந்த மறுசீரமைப்பு காலத்தை பயன்படுத்தி தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று வருகின்றனர்.