வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இனி TAX.. சிலர் செய்த சில்மிஷத்தால் கொஞ்சம் கடுப்பான Bali அரசு!

By Ansgar R  |  First Published Jul 14, 2023, 1:09 PM IST

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பாலி மக்கள் மிகவும் புனிதமானதாக கருதும் பல நூறு வருட பழமையான ஒரு மரத்தின் நடுவே நின்று ஒரு ரஷ்ய பெண்மணி, ஆடையின்றி நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.


பாலி, இந்தோனேசிய நாட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய மாகாணம், உலகத்தில் உள்ள மொத்த இயற்கை அழகையும் தன்னகத்தே கொண்ட ஒரு குட்டி தீவு. இயற்கை அழகு எந்த அளவுக்கு இங்கு வியாபித்து இருக்கிறதோ, அதே அளவுக்கு வரலாற்று சிறப்புமிக்க பல முக்கியமான இடங்கள் இந்த தீவு முழுவதும் உள்ளது. 

ஆனால் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டிலிருந்து வரும் வெகு சில பயணிகளால் பாலி-யின் பாரம்பரியம் அவ்வப்போது புண்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருகிற 2024ம் ஆண்டு முதல் இந்தோனேசிய ரூபியா மதிப்பில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் IDR செலுத்திவிட்டு தான் பிற நாடுகளில் இருந்து பாலி வரும் சுற்றுலா பயணிகள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 50 ஆயிரம் இந்தோனேசிய ரூபியா என்பது இந்திய மதிப்பில் சுமார் 830 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

சரி ஏன் இந்த திடீர் மாற்றம்? 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பாலி மக்கள் மிகவும் புனிதமானதாக கருதும் பல நூறு வருட பழமையான ஒரு மரத்தின் நடுவே நின்று ஒரு ரஷ்ய பெண்மணி, ஆடையின்றி நின்று புகைப்படம் எடுத்துள்ளார். இது அந்நாட்டு மக்களின் நம்பிக்கை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல ஒரு ரஷ்ய பயணி ஒருவர் அவர்கள் கடவுளாக மதித்து வரும் ஒரு மலையின் மீது ஏறி ஆடையின்றி நின்று தனது பின்புறத்தை காட்டிக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

கழிவறையில் கேமரா.. மேலாளரின் மனைவி மற்றும் மகளை படமெடுத்த மெக்கானிக் - சிக்கியது எப்படி? 

இது போன்ற செயல்கள் அப்பகுதி மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக இருந்துள்ளது. இதுவரை இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பாலி அரசு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சட்டங்களை மேலும் கடுமையாக்கத் தான் 2024ம் ஆண்டு முதல் மேற்குறிய தொகையை வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

அதே நேரத்தில் பாலி-யில் வெளிநாட்டு பயணிகள் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுப்பதையும் விரைவில் அந்த நாடு தடை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மக்கள், சுற்றுலா பயணிகளாக ஒரு நாட்டிற்கு செல்லும்போது அங்கு மதிக்கப்படும், போற்றப்படும் விஷயங்களை தாங்களும் மதித்து நடப்பது தான் சிறந்தது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இன்று பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி..

click me!