சிங்கப்பூரின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிபர் தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ள மூன்று போட்டியாளர்களும், தற்பொழுது பொதுவெளியில் மக்களை சந்தித்து பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் தற்பொழுது அதிபராக பணி செய்து வரும் 68 வயது பெண்மணியான ஹலீமா யாக்கோப் அவர்களின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், சிங்கப்பூரின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் தற்பொழுது முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த அதிபர் தேர்தலில் பங்கேற்க மூன்று பேர் தகுதி பெற்றுள்ளனர், GIC நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி இங் கொக் சொங் (Ng Kok Song), சிங்கப்பூரின் முன்னாள் மூத்த அமைச்சர் (சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர்) தர்மன் சண்முகரத்தினம் மற்றும், NTUC Income நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியென் (Tan Kin Lian) ஆகியோர் ஆவர்.
undefined
மேலும் இந்த மூவரும் தற்பொழுது பொதுமக்களை சந்தித்து தங்களுடைய அதிபர் தேர்தலுக்கான வாக்குகளை இப்பொழுது சேகரிக்க துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூரின் உட்லன்ஸில் உள்ள கம்போங் அட்மிரல்டி உணவக அங்காடியில் பொதுமக்களை சந்தித்து பேசியுள்ளார் டான் கின் லியென்.
அதிபர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் தர்மன் சண்முகசுந்தரம் தனக்கு ஒரு கடுமையான போட்டியாளராக விளங்குவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து விஷயங்களிலும் தன்னுடைய முன் அனுபவம் உதவும் என்று தான் கருவுவதாகவும் மக்களிடம் கூறினார்.
தர்மன் சண்முகசுந்தரம் போன்ற மூத்த அதிகாரிகளுடன் தான் போட்டியிடுவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அவர்களுக்கு நிகராக தனக்கும் அனுபவம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 1992ம் ஆண்டுக்கும் 1997ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரின் அனைத்து உலக ஒத்துழைப்பு மற்றும் இரு தரப்பு காப்பீட்டு பெடரேஷனின் தலைவராக பொறுப்பு வகித்தவர் டான் கின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கு போட்டியிட தகுதியாகியுள்ள மூன்று பேரும் தங்களுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர். அதேபோல அந்த வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில் மூன்று பேர் இல்லாமல் ஒரே ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்யும் பட்சத்தில் ஒருமனதாக அவரே சிங்கப்பூரின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.