சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் செம்ப்கார்ப் மரைன் இன்டகிரேட்டட் யார்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வணிக நிர்வாகியாகப் பணியாற்றிய 61 வயதான மலேசியர் நபர் ஒருவர் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவர் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், பாலகிருஷ்ணன் கோவிந்தசாமி என்ற அந்த மலேசிய நபர் மீது, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, சிங்கப்பூரின் ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு முதல் கடந்த 2021 வரை, வெவ்வேறு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூலம் சுமார் 8க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களிடமிருந்து குற்றம்சாட்டப்பட்டுள்ள பாலகிருஷ்ணன், குறைந்தபட்சம் S$202,877 ரொக்கமாகப் பெற்றதாகவும் அல்லது பெற முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
நாய்களோடு உடலுறவு.. அதை படமெடுத்து வைத்த தம்பதி - அலேக்காக தூக்கி வழக்கு போட்ட ஆஸ்திரேலிய போலீஸ்!
சிங்கப்பூர் சிபிஐபியின் கூற்றுப்படி, இந்தத் தொகைகள் பாலகிருஷ்ணனின் முதலாளியுடன், ஒப்பந்ததாரர்களின் வணிக நலன்களை முன்னேற்றுவதற்கான தூண்டுதலாக அல்லது வெகுமதியாக அவருக்கு வழங்கப்பட்டு என்று கூறப்படுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 124ன் கீழ் பாலகிருஷ்ணனின் ஐந்து குற்றச்சாட்டுகளும் தண்டனைக்குரியவை ஆகும், அதாவது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்தக் குற்றங்களுக்கு அவர் இரண்டு மடங்கு தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் அரசை பொறுத்தவரை ஊழல் குற்றத்திற்காக தண்டிக்கப்படும் எந்தவொரு நபருக்கும் S$1,00,000 (இந்திய மதிப்பில் சுமார் 60 லட்சம்) வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.