மேற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகரில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் அங்கு வசித்து வரும் சுமார் 30,000க்கும் அதிகமான மக்களை, நேற்று சனிக்கிழமை அன்று தங்கள் வீடுகளை காலிசெய்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு, அம்மாகாண அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
"இங்கு நிலைமை மிகவும் மோசமாக மாறிவருகின்றது என்றும், தற்போது நாங்கள் சுமார் 30,000 பேரை வெளியேற்றும் உத்தரவின் நிலையில் உள்ளோம், ஆனால் மேலும் 36,000 பேர் வெளியேற்றப்படும் நிலையில் உள்ளார் என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் அவசரகால மேலாண்மை மந்திரி போவின் மா கூறினார்.
சுமார் 1,50,000 பேர் வசிக்கும் நகரமான கெலோவ்னாவில், மில்லியன் கணக்கான ஏக்கர்களை எரித்து சாம்பலாகியுள்ள அந்த காட்டுத்தீ, கனடா முழுவதும் பரவி வருகின்றது, இதனால் ஏற்படும் அடர்ந்த புகை மண்டலத்தால் மக்கள் பலர் மூச்சு திணறலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விற்பனைக்கு வந்துள்ள உலகின் மலிவான வீடு : கற்பனை கூட செய்யமுடியாத விலை!
"வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்படும்போது அவற்றைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணரவேண்டும் என்றும் போவின் மா ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்." காட்டுத்தீயின் வீரியம் தெரியாமல் அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க செல்லும் சில "த்ரில் விரும்பிகளையும்" தடுக்கும் வேலை தங்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இது வாழ்வா சாவா என்ற நிலை என்றும், ஆகவே வெளியேற்ற உத்தரவு பெற்ற தயவு செய்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் அவர்கள் கூறியுள்ளனர். ஹோட்டல்கள் மற்றும் பிற தற்காலிக தங்குமிடங்களில் பார்வையாளர்கள் நுழைவதைத் தடைசெய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கெலோவ்னா மற்றும் அருகிலுள்ள நகரங்களான கம்லூப்ஸ், ஆலிவர், பென்டிக்டன் மற்றும் வெர்னான் மற்றும் அமெரிக்க எல்லைக்கு அருகிலுள்ள ஓசோயோஸ் ஆகிய பகுதிகளிலும் வெளிநபர்கள் வந்து தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
"நீங்கள் அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றால், தயவுசெய்து இந்த பகுதிகளுக்கு வெளியே இருங்கள்" என்று எபி கூறினார். வடமேற்கு பிரதேசங்களின் தலைநகரான யெல்லோநைஃப் காலி செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அந்தப் பகுதியிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாய்களோடு உடலுறவு.. அதை படமெடுத்து வைத்த தம்பதி - அலேக்காக தூக்கி வழக்கு போட்ட ஆஸ்திரேலிய போலீஸ்!