விசித்திர தள்ளுபடி.. டைனோசர் போல கத்திய நபர் - எட்டிப்பார்த்து Offer முடிஞ்சுட்டு கிளம்பு என்று சொன்ன பாட்டி!

By Ansgar R  |  First Published Aug 20, 2023, 10:46 AM IST

தள்ளுபடி கொடுத்து மக்களை கவர்வதில் வெளிநாட்டவர்களுக்கு இணை அவர்களே என்று கூறும் அளவிற்கு உலக அளவில் பல விசித்திரமான தள்ளுபடிகளை அறிவித்து மக்களை மகிழ்வித்து வரும் நிறுவனங்களில் ஒன்றுதான் McDonald's.


அமெரிக்காவை மையமாகக்கொண்டு, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கிளைகளை பரப்பி செயல்பட்டு வரும் நிறுவனம் தான McDonald's. இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்ட் அவுட்லெட் ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு ஒரு விசித்திரமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. 

இது ஏற்கனவே பலமுறை மெக்டொனால்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு தள்ளுபடி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது மெக்டொனால்டின் Dinosaur Mcflurry என்ற அந்த ஐஸ்கிரீமை 20% வரை தள்ளுபடியுடன் பெற, வாடிக்கையாளர்கள் டைனோசரை போல உரக்கத்த வேண்டும். 

Tap to resize

Latest Videos

சிங்கப்பூரில் உள்ள ஏதோ ஒரு மெக்டொனால்ட் அவுட்லெட்டிற்கு சென்று அவர்கள் டைனோசரை போல கத்தினால், அந்த டைனோசர் McFlurry ஐஸ்கிரீம் அவர்கள் கத்தும் சத்தத்திற்கு ஏற்ப 20% வரை தள்ளுபடியில் கிடைக்கும். இந்நிலையில் இந்த தள்ளுபடியானது கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி ஆகிய இரு நாட்கள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 

ரஷ்யாவின் லூனா-25 தரையிறங்குவதில் சிக்கல்! விண்கலத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு!

அதேபோல இந்த இரண்டு தினங்களிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை மட்டுமே இந்த தள்ளுபடி அமலில் இருக்கும் என்பதும் நாம் உன்னிப்பாக கணவனிக்கவேண்டிய விஷயம். இந்த சூழலில் அந்த இரு நாட்களையும் சரியாக உபயோகிக்க வேண்டும் என்று கூறி ஆகஸ்ட் 18ம் தேதி சிங்கப்பூரில் உள்ள ஒரு மெக்டொனால்ட் அவுட்லெட்டுக்கு ஐஸ்கிரீம் வாங்க சென்றுள்ளார் ஒரு நபர். 

அந்த நபர் கடைக்கு சென்று ஐஸ்கிரீம் வாங்க டைனோசரை போல உரக்க சக்தி உள்ளார், அப்பொழுது கடைகுள்ளே இருந்து எட்டிப் பார்த்த ஒரு மெக்டொனால்ட் ஊழியரான ஒரு பாட்டி, "ஆஃபர் எல்லாம் முடிஞ்சு போச்சு, கிளம்புப்பா" என்று கூறியுள்ளார். 

இதைக்கண்டு திடுக்கிட அந்த நபர் காரணம் கேட்க, ஆகஸ்ட் 17 மற்றும் 18 என்று நாட்களை சரியாக தெரிந்துகொண்ட நீங்கள், இந்த தள்ளுபடி மாலை 3 மணி முதல் 6 மணி வரை மட்டுமே இருக்கும் என்பதை மறந்துவிட்டு, 7 மணிக்கு வந்து கத்தினால் எப்படி offer கிடைக்கும் என்று பாட்டி கேட்க, தலையை சொரிந்துகொண்டே அங்கிருந்து கிளம்பியுள்ளார் அந்த நபர். 

ஐஸ்கிரீம் சாப்பிடும் ஆர்வத்தில், டைமிங்க மிஸ் பண்ணிட்டியேபா என்று இணையவாசிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிவருகின்றனர். இதே போன்ற சம்பவம் சிங்கப்பூரில் ஒரு சில இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

லட்சக்கணக்கில் லஞ்சம்.. சிங்கையில் சிக்கிய மலேசியர் பாலகிருஷ்ணன் - குற்றம் நிரூபணமானால் என்ன தண்டனை தெரியுமா?

click me!