சிங்கப்பூரில் கொண்டாடிய தமிழர் திருநாள் - பிற நாட்டினரும் பங்கேற்ற கூட்டு பொங்கல்

Asianet News Tamil  
Published : Jan 17, 2017, 10:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
சிங்கப்பூரில் கொண்டாடிய தமிழர் திருநாள் - பிற நாட்டினரும் பங்கேற்ற கூட்டு பொங்கல்

சுருக்கம்

பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

சிங்கப்பூர் நாட்டின் லிட்டில் லிட்டில் இந்தியா பகுதியில் இந்தாண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

கடந்த 7ம் தேதி பொங் கல் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியை பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, லிட் டில் இந்தியா பகுதி முழுவதும் பொங்கல் விழா கொண்டாடத்தில் மூழ்கி இருந்தது.

இந்த பொங்கல் விழா கொண்டாட்டம், அடுத்த மாதம் 12ம் தேதி வரை தொடர்ந்து நடந்து வருகிறது. கேம்பல் லேனில் அமைந்துள்ள பொங்கல் விழா கிராமத்தில், பொங்கல் பண் டிகைக்கு தேவையான அனைத் து பொருட்களும் விற்கப்பட்டன.

பொங்கல் விழாவையொட்டி லிட்டில் இந்தியா பகுதிக்கு கூட்டம் கூட்டமாய் பொங்கலுக்கு தேவையான தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி சென்றனர்.

பொங்கல் நாளன்று மாலையில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய பொங்கல் நிகழ்ச்சி இடம் பெற்றது. பெரிய மண்பானையில் பொங்கல் வைத்து, அனைவரும் ஒன்றுகூடி சூரியப் பொங்கல் விழா கொண்டாடினர்.

தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொங்கல் வைத்து மகிழ்ந்தார்.

லிட்டில் இந்தியாவில் உள்ள கேம்பல் லேனில் நடத்தப்பட்ட கூட்டுப் பொங்கலில் இந்தியர்களுடன் சேர்ந்து பிற நாட்டினர்களும் சுற்றுப்பயணிகளும் கலந்துகொண்டு, விழாவை கொண்டாடினர். இதில் நடத்தப்பட்ட பொங்கல் வைக்கும் போட்டியில் 30 குழுக்கள் பங்கேற்றன.

PREV
click me!

Recommended Stories

Countries Without Trains: இந்த நாடுகளில் ரயிலே கிடையாது.. இந்தியாவின் அண்டை நாடு ஒன்றும் இந்த பட்டியலில் இருக்கு
Thailand Travel Rules: தாய்லாந்து போறீங்களா.? இந்தியர்களுக்கு புதிய விதிகள்.. இந்த ஆவணங்கள் ரொம்ப முக்கியம்