Twitter-ன் போட்டி தளமான 'Threads'-ல் இணைந்த சிங்கப்பூர் பிரபலங்கள்!

By Dinesh TG  |  First Published Jul 7, 2023, 7:28 PM IST

டுவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ள திரெட்ஸ் செயலியின் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகத் தலைவர்கள் பலரும், நட்சத்திர நடிகர்கள் பலரும் இணைந்து வருகின்றனர்.
 


ட்விட்டருக்கு போட்டியாக, Threads என்ற செயலியை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தொடங்கியுள்ளார். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்திற்குள், 10 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பதிவுசெய்துள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இந்த புதிய Threads செயலியை, தற்போது, இன்ஸ்டாகிராம் கணக்கு வழியாக மட்டுமே அணுக முடியும் தனியாக பதிவு செய்ய முடியாது.

உலகத் தலைவர்கள் பலரும், நட்சத்திர நடிகர்கள் பலரும் இந்த த்ரட்ஸ் செயலியில் இணைந்து வருகின்றனர். சிங்கப்பூர் தலைவர்களும் அத்தளத்தில் இணைந்துள்ளனர்.

பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong)

சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங், த்ரெட்ஸ் (Threads) தளத்தில் இணைந்தார். அவரின் கணக்கில் தற்போது 6,679 இணையவாசிகள் இணைந்துள்ளனர். தொடர்ந்து இணைந்தும் வருகின்றனர்.

அதில், முதல் த்ரெட்ஸ் பதிவாக 3 வருடங்களுக்குப் பின்னர் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேசிய தினக் கூட்டத்தை நேரடியாகப் பார்ப்பது அவர் பதிவிட்டுள்ளார்.

செய்தித்தாள் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்டிய SHP Media trust? அரசு நிதி ஒதுக்கப்படும் என எச்சரிக்கை!

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong)

சிங்கப்பூரின் துணைப்பிரதமர் லாரன்ஸ் வோங், Threads (த்ரெட்ஸ்) தளத்தில் இணைந்தார். அவருடன் தற்போது 8,541 இணையவாசிகள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

அதில், அவர் முதல் பதிவாக "Hello Threads!" எனும் குறிப்புடன் அவர் தமது படத்தையும் பதிவிட்டார்.

அவர்களுடன் மற்றும் பல நட்சத்திர நடிகர்களும் த்ரெட்ஸ் தளத்தில் இணைந்து வருகின்றனர்.

Latest Videos

சிக்கப்பூரில் வீசப்போகும் புழுதிப் புயல்! தயார் நிலையில் இருக்கும் அரசு - மக்களுக்கும் எச்சரிக்கை!

click me!