இந்த பனிப் பாறைகளை நம்பி வாழ்ந்து வரும் சுமார் பத்தாயிரம் பேரின் வாழ்வாதாரமும் பெரும் கேள்விக்குறியாகி வருகிறது
உலக அளவில் புவி வெப்பமாவது நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது, இதனால் பனிப்பாறைகள் உலகளாவிய அளவில் தொடர்ச்சியாக உருகி கொண்டே வருகிறது. திரும்பத் திரும்ப மேற்கூறிய இந்த வாசகத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக நாம் அதிக அளவில் கேட்டுக்கொண்டே வருகிறோம். ஆனால் இது எவ்வளவு பெரிய விபரீதம் என்பதை இன்னும் மனிதகுலம் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.
புவி அதிக அளவில் வெப்பமாக ஆக ஆக, உலக அளவில் உள்ள பனி பாறைகள் மெல்ல மெல்ல கரைய துவங்கும். ஒரு கட்டத்தில் பணிப்பாறைகள் அனைத்தும் உருகி கடலின் நீர்மட்டம் பெருகி, இந்த பூமி பந்து கடலுக்குள் மூழ்கிவிடும் மாபெரும் அபாயம் இருக்கிறது. ஆனால் இது அடுத்த சில ஆண்டுகளில் நடந்து விடப் போவதில்லை என்றாலும், நிச்சயம் நமக்கு பின்னால் வரப்போகும் சந்ததிகளை இது பெரிய அளவில் பாதிக்கும்.
அந்த வகையில் சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டகு (Dagu) என்ற பணிப் பாறைகள் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் உருகி வருகிறது. அதே சமயம் இந்த பனிப் பாறைகளை நம்பி வாழ்ந்து வரும் சுமார் பத்தாயிரம் பேரின் வாழ்வாதாரமும் பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. டகு பனிப்பாறைகளுக்கு அருகில் வாழ்கின்ற இந்த பத்தாயிரம் பேருக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக அது திகழ்கிறது, மேலும் நீர் மின்சாரம் தயாரித்துக் கொள்ளவும் அது பெருமளவு உதவி வருகிறது.
இதையும் படியுங்கள் : கண்களை கட்டி உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய மாணவி! கொடூர காதலன்!
உலக அளவில் சிறப்பு வாய்ந்த இந்த டகு பணிப்பாறைகளின் தொகுப்புகளை சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருடம் தோறும் அங்கு வந்து ரசித்து செல்கின்றனர். இதனால் சுற்றுலா மூலமும் பலருக்கு டகு ஒரு சிறந்த வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்நிலையில் உலக வெப்பமயமாதலின் காரணமாக தற்பொழுது டபு பணிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகத்துவங்கியுள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் டகு பணிப்பாறையில் இருந்து சுமார் 70 சதவீதமான ஐஸ் பாறைகள் உருகி உள்ளதாக சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தான் ஜு பின் என்ற 32 வயது விஞ்ஞானி இந்த பனிப்பாறைகள் உருகுவதில் இருந்து தடுக்க ஒரு சிறந்த வழியை கண்டறிந்துள்ளார். சுமார் 4300 சதுர அடி பரப்பளவில் ஒரு வெள்ளை நிற ஆடை போன்ற ஒரு பொருளை இவர்கள் தயாரித்து, அந்த பனிப்பாறைகள் அருகே பொருத்தி வருகின்றனர், இவை பணிப்பாறையின் மீது நேரடியாக விழும் சூரிய வெளிச்சத்தை அப்படியே பிரதிபலித்து விண்ணுக்கு அனுப்பும் வல்லமை கொண்டவை.
ஜு பின்-னின் குழு தொடர்ச்சியாக அந்த பொருளை கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களின் ஆராய்ச்சியில் அந்த ஷீட் போன்ற அமைப்பு சுமார் 93%க்கும் அதிகமான சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறனைக் கொண்டுள்ளது. அது Dagu பெரிய அளவில் வெப்பத்தை இழக்க உதவுகிறது, இந்த ஷீட் செல்லுலோஸ் அசிடேட், தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை இழை, கொண்டு டபு அதன் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜு பின் தனது குழுவுடன் கண்டுபிடித்த இந்த வகை ஷீட்கள் டகு-வை போல பலமடங்கு பெரிய பனிப்பாறைகளை காக்க வல்லது அல்ல. சில பனிப்பாறைகள் அதிவேகத்தில் நகர்ந்துகொண்டே இருக்கும், அவற்றையெல்லாம் காப்பாற்ற மனிதர்களாகிய நம்மால் தான் முடியும். ஒன்றிணைவோம், புவி வெப்பமாதலை தடுக்க உதவுவோம்.
இதையும் படியுங்கள் : சிக்கப்பூரில் வீசப்போகும் புழுதிப் புயல்! மக்களை எச்சரிக்கும் அரசு!