மாணவனுக்கு ஆபாச படம் காட்டிய 49 வயது டீச்சர்.. "தலையில் தட்டி" ஜெயிலில் போட்ட போலீசார்!

By Ansgar R  |  First Published Jul 7, 2023, 1:30 PM IST

மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ள விரும்பிய ஒரு மாணவனிடம் தான் அந்த ஆசிரியர் அவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.


சிங்கப்பூரில் தனது ஆசிரியர் பணியில் இருந்து விலகிச் சென்றுள்ள 49 வயது ஆசிரியருக்கு தற்பொழுது சிங்கப்பூர் அரசு 54 நாட்கள் ஜெயில் தண்டனை வழங்கி உள்ளது. அவர் தண்டிக்கப்பட முக்கிய காரணம், 17 வயது நிரம்பாத, தன்னிடம் பயின்று வந்த ஒரு மாணவனுக்கு அவர் ஆபாச படங்களை காட்டியதுதான்.

மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ள விரும்பிய ஒரு மாணவனிடம் தான் அந்த ஆசிரியர் அவ்வாறு நடந்துகொண்டுள்ளார். மன அழுத்தத்தை சமாளிக்க உன் பாலுணர்வுகள் தூண்டப்படும் வகையில் நீ நடந்துகொள் என்று அந்த மாணவனுக்கு அவர் ஆலோசனையை வழங்கியது அம்பலமாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

கடந்த ஜனவரி 28, 2021 அன்று, பாதிக்கப்பட்ட அந்த மாணவனின் தாய், அந்த ஆசிரியருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் தனது மகன் பள்ளியில் ஒதுக்கிவைக்கப்பட்டதாகவும், இதனால் வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாமல் வாழ்வது போல உணர்வதாகவும், பள்ளியைத் தான் தவிர்க்கும் எண்ணம் தனக்குள் எழுந்திருப்பதாகவும் அதில் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : இந்திய துணைத் தூதரகம் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம்!

இதற்கு பதில் அளித்த அந்த ஆசிரியர், பள்ளிப்படிப்பில் அவரது மகன் பின்தங்கியுள்ளதால், நான் அவனை நல்லபடியாக பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு நாள் அந்த மாணவனை தனது வீட்டிற்கு இரவு உணவு உன்ன அந்த ஆசிரியர் அழைத்துள்ளார். அப்போது நீ உன் மனதில் உள்ள அந்த கடுமையான எண்ணங்களை மாற்றிக்கொள்ள, நீ உன் கவனத்தை பாலியல் ரீதியாக திருப்ப வேண்டும் என்று கூறி, அவனுடைய மேலாடைகளை கழட்ட சொல்லியுள்ளார். 

பிறகு அந்த மாணவனுக்கு 3 ஆபாச படங்களை காட்டி, அவனை மது அருந்த சொல்லியுள்ளார். இதனால் பயந்த அந்த மாணவன் நேராக தனது தாயிடம் புகார் அளிக்க. அந்த தாய் பள்ளி நிர்வாகத்துடன் பேசி அவர் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார். இந்த பிரச்சனையில் தான் அந்த ஆசிரியர் அவராகவே பள்ளியில் இருந்து விலக, தற்போது அவருக்கு 54 நாள் சிறையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.   

சிங்கப்பூரின் GAG சட்டத்தின் கீழ் சம்பவத்தின் பொது அந்த மாணவனின் வயது 17 என்பதால் மாணவனின் பெயரையும், ஆசிரியர் பெயரையும் வெளியிட நீதிமன்றம் மறுத்துள்ளது. 

இதையும் படியுங்கள் : பனிப்பாறைகளை காப்பாற்ற இப்படி ஒரு வழி இருக்கா? புதிய ஆராய்ச்சியில் சீனா!

click me!