அந்த மருத்துவர் தனது கிரெடிட் கார்டை மாற்றிய பிறகும் அவருடைய கணக்கிலிருந்து இதுவரை 6 முறை மொத்தம் 3600 அமெரிக்க டாலர்கள் தொடர்ச்சியாக காணாமல் போய் உள்ளது.
சிங்கப்பூரில் தனது அனுமதி இல்லாமலேயே, தனது கிரிடிட் கார்டு பயன்படுத்தப்பட்டு சுமார் 1060 அமெரிக்க டாலர்கள் பறிபோன நிலையில் அதை கண்டு அதிர்ந்து போன மருத்துவர் ஒருவர் உடனடியாக தனது கிரெடிட் கார்டை வங்கியில் ஒப்படைத்து புதிதாக ஒன்றை மாற்றியுள்ளார். ஆனால் இதற்கு பிறகு நடந்த விஷயங்கள் தான் இன்னும் பலரால் எப்படி நடந்தது என்று கணிக்க முடியாமல் உள்ளது.
அந்த மருத்துவர் தனது கிரெடிட் கார்டை மாற்றிய பிறகும் அவருடைய கணக்கிலிருந்து இதுவரை 6 முறை மொத்தம் 3600 அமெரிக்க டாலர்கள் தொடர்ச்சியாக காணாமல் போய் உள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவர் ஸினா லிம் கொடுத்துள்ள தகவலின்படி ஒரே ஒரு முறை தன்னுடைய டெபிட் கார்டை பயன்படுத்தி தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவருக்கு ஏர் ஏசியா நிறுவனத்தில் அவர் டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.
ஆனால் எப்படி அவருடைய கிரெடிட் கார்டு ஹேக் செய்யப்பட்டது, அதிலும் குறிப்பாக அவர் தொடர்ச்சியாக 3 முறை அந்த கிரெடிட் கார்டை மாற்றி உள்ள நிலையில் மீண்டும், மீண்டும் ஆறு முறை அவருடைய கணக்கிலிருந்து எப்படி பணம் பறிபோனது என்பது மர்மமாகவே உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள், மருத்துவர் லிம்மின் இந்த விஷயம் மிக மிக அரிதாக நடக்கும் ஒன்று என்று கூறியுள்ளனர்.
மருத்துவரின் கிரெடிட் கார்ட் தகவல்கள் வெளியில் கசிந்து இருந்தாலும், அவர் அதை மாற்றிய பிறகும் எப்படி இப்படி நடக்கிறது என்ற குழம்பும் தான் பலர் மத்தியில் உள்ளது. வங்கி அதிகாரிகளின் சாதுர்யத்தால் லிம்மின் பணம் மீண்டும் பெறப்பட்டுவிட்டது என்றாலும் கூட அது எப்படி காணாமல் போனது என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றது.
சிங்கப்பூரின் எம்ஏஎஸ் என்று அழைக்கப்படும் மணி அத்தாரிட்டி ஆப் சிங்கப்பூரிலும் இந்த நூதன ஆன்லைன் திருட்டு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி கார்டுகளை மாற்றும்போது அதன் சீரியல் எங்களை கொண்டு இந்த நூதன திருட்டு நடக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகின்றது. மேலும் மருத்துவர் லிம்மின் நெருங்கி நண்பர்கள் இந்த வேலையை செய்துள்ளார்களா என்றும் விசாரணை நடந்து வருகின்றது.
எப்போதும் தங்களது வங்கி மற்றும் பிற கார்டு தகவல்களை யாரிடமும் ஒருபோதும் பகிர வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நம்மை ஆச்சரியப்படுத்தும் அதே நேரத்தில் அச்சுறுத்தவும் செய்கின்றது என்பது தான் உண்மை என்கிறார்கள் மக்கள்.