பொதுவெளியில் நடந்த சம்பவம்.. சிங்கப்பூரில் வழக்கறிஞர் ரவி மீது வழக்கு பதிவு - பழைய கேஸ் பெண்டிங்ல இருக்கு!

By Ansgar R  |  First Published Jul 14, 2023, 4:48 PM IST

மருத்துவ பரிசோதனைக்காக ரவி மனநல கழகத்தில் (IMH) ரிமாண்ட் செய்யப்பட்டார், முன்னதாக ரவிக்கு Bipolar Disorder இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சிங்கப்பூரில் பிரபலமான வழக்கறிஞர்களில் ரவியும் ஒருவர், இந்நிலையில் 54 வயதான எம். ரவி, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14) அன்று சிங்கப்பூரின் யியோ சூ காங் எம்ஆர்டி நிலையத்தின் அருகே ஒரு ஆடவரை அறைந்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக கூச்சலிட்டதாகவும் அவர் மீது தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ரவி மீது, ஒருவருக்கு காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக மனநல கழகத்தில் (IMH) ரிமாண்ட் செய்யப்பட்டார், முன்னதாக ரவிக்கு Bipolar Disorder இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

undefined

Bipolar Disorder என்பது தீவிர மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும் ஒருவித மனநிலை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இனி TAX.. சிலர் செய்த சில்மிஷத்தால் கொஞ்சம் கடுப்பான Bali அரசு!

சிங்கப்பூர் ஊடகங்கள் அளித்துள்ள தகவலின்படி, அந்த சம்பவம் கடந்த ஜூலை 12, 2023 அன்று மாலை 5:30 மணியளவில் Yio Chu Kang MRT நிலையத்திற்கு அருகில் நடந்துள்ளது. ரவி மீண்டும் ஜூலை 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள நிலையில், பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, S$2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிங்கப்பூரில் நடந்த வழக்கில், வழக்கறிஞர் ரவியை சுமார் 5 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்துள்ளது சிங்கப்பூர் அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரொம்ப சைலெண்டாக மாறிய சிங்கப்பூரின் பிரபல தேக்கா மார்க்கெட்.. ஏன்? அங்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா?

click me!