சிங்கப்பூர்.. அதிகரிக்கும் தொற்று.. ICUவில் அனுமதிக்கப்படுபவர்கள் அளவு அதிகரிப்பு - MOH விடுத்த எச்சரிக்கை!

By Ansgar R  |  First Published Dec 9, 2023, 12:13 PM IST

Singapore Covid Cases : சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளுக்கு மத்தியில், COVID-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.


சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் நேற்று டிசம்பர் 8ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி கடந்த நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரையிலான வாரத்தில் மதிப்பிடப்பட்ட COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை 32,035 ஆக உயர்ந்துள்ளது, முந்தைய வாரத்தில் அது 22,094 வழக்குகள் என்ற அளவில் இருந்தன என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

சிங்கப்பூரில் சராசரியாக, தினசரி COVID-19 மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 136ல் இருந்த நிலையில், அது தற்போது 225 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது என்று அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் தினசரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் அளவில் சராசரியாக ஒருவர் என்ற அளவில் இருந்தது இப்பொது 4 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

போலீஸ் உடை.. மிடுக்கான நடை.. நேக்காக வந்து பைக்கை திருடிய போலி SCDF அதிகாரி - சிங்கப்பூர் போலீஸ் வலை வீச்சு!

தொற்றுநோய்களின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் ICU வழக்குகள் அதிகமாக இல்லை என்று MOH தெரிவித்துள்ளது. "ஏற்கனவே பிஸியாக இருக்கும் எங்கள் மருத்துவமனைகளுக்கு இது பணிச்சுமையை சேர்த்துள்ளது" என்று MOH கூறியது, இந்த அலையின் பாதையை நெருக்கமாகக் கண்காணித்து அதன் சுகாதாரத் திறனைச் சமாளிப்பதை உறுதிசெய்கிறது என்றும் MOH மேலும் கூறியது.

மக்கள்தொகையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவது மற்றும் ஆண்டு இறுதிப் பயணம் மற்றும் பண்டிகைக் காலங்களில் பயணம் மற்றும் சமூக தொடர்புகள் அதிகரிப்பது உள்ளிட்ட பல காரணிகளால் வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படலாம் என்று MOH நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீன முன்னாள் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் மரணம்: தற்கொலையா? சித்தரவதையா?

பயணிகளுக்கான அதன் சுகாதார ஆலோசனையில், உடல்நல அபாய மதிப்பீட்டிற்காக பயணத்திற்கு நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன்பு மக்கள் தங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று MOH பரிந்துரைத்தது. தேவையான தடுப்பூசிகள் பற்றிய ஆலோசனையும் இதில் அடங்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!