சீன முன்னாள் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் மரணம்: தற்கொலையா? சித்தரவதையா?

By Manikanda Prabu  |  First Published Dec 8, 2023, 3:22 PM IST

சீன முன்னாள் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் உயிரிழப்பு தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் குயின் கேங். கடந்த ஜூலை மாதம் அவரது பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு முன்பு அப்பதவியில் இருந்த வாங் யி மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். குயின் கேங்கின் பதவி பறிப்புக்கு அந்நாட்டு அரசு அப்போது எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, அவர் மாயமானதாக தகவல்கள் வெளியாகின. அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், சீன முன்னாள் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் உயிரிழந்து விட்டதாகவும், தற்கொலை செய்து கொண்டு அவர் உயிரிழந்திருக்கலாம் அல்லது சித்தரவதையால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

undefined

பெய்ஜிங்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஜூலை மாத இறுதியில் குயின் கேங் உயிரிழந்ததாக, சீன உயர் அதிகாரிகளை அணுகக்கூடிய இரண்டு பேரை மேற்கோள்காட்டி, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பொலிட்டிகோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சராவதற்கு முன்பு கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை அமெரிக்காவுக்கான சீன தூதராக குயின் கேங் பணியாற்றினார். அப்போது, அவருக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான, சீன கம்யூனிஸ்ட் சார்பில் நடந்த உட்கட்சி விசாரணையில், அந்த உறவும், அதன் மூலம் அவருக்கு ஒரு குழந்தை உள்ளதும் உறுதி செய்யப்பட்டதால் அவரது பதவி பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஸ்டாப் தாலி கட்டாதீங்க: ஷாக் கொடுத்த மணப்பெண்; அதிர்ச்சியில் உறைந்த மணமகன்!

அமெரிக்காவில் அவரது வாழ்க்கை முறை குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி விசாரணை நடத்தியது. சீனத் தூதராக குயின் கேங் இருந்த காலம் முழுவதும், அவர் அந்த உறவில் இருந்ததாக கம்யூனிஸ்ட் கட்சியின் உள் விசாரணையில் கண்டறியப்பட்டதாக சீன மூத்த அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. திருமணத்தை மீறிய அவரது உறவு அல்லது வேறு ஏதேனும் நடத்தைகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதா என்பது பற்றி முழுமையாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான செய்தி ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

எனவே, சீன முன்னாள் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் தற்கொலை செய்து கொண்டு அவர் உயிரிழந்திருக்கலாம் அல்லது சித்தரவதையால் அவர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!