"நாங்கள் அதை அணிவதில்லை".. தலைப்பாகை அணிந்த சீக்கியர்.. தாக்கிய அமெரிக்கர் - பரபரப்பான New York! என்ன நடந்தது?

By Ansgar R  |  First Published Oct 21, 2023, 6:05 PM IST

New York : இந்த 21ம் நூற்றாண்டிலும், விண்ணை முட்டும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டபோதிலும் சில கசப்பான சம்பவங்கள் உலக அளவில் அரங்கேறிக்கொண்டு தான் வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இனவெறியோடு ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நியூயார்க் நகர் பேருந்தில் தலைப்பாகை அணிந்து பயணித்ததற்காக, சீக்கிய இளைஞரை தாக்கியதற்காக அமெரிக்காவில் உள்ள 26 வயது நபர் கைது செய்யப்பட்டு, தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து, கடந்த ஜூலை 2021ல் நிபந்தனை பரோலில் விடுவிக்கப்பட்ட கிறிஸ்டோபர் பிலிப்பெக்ஸை போலீஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். 

கடந்த அக்டோபர் 15 அன்று குயின்ஸில் உள்ள 118வது தெரு மற்றும் லிபர்ட்டி அவென்யூ அருகே பேருந்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகின்றது.

Tap to resize

Latest Videos

இந்த நாட்டின் பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு ரூ.4.16 லட்சம் பணம் கிடைக்குமா? உண்மை என்ன?

என்ன நடந்தது?

போலீசார் அளித்த தகவலின்படி, நியூயார்க் நகர MTA பேருந்தில், பாதிக்கப்பட்ட 19 வயது சீக்கிய இளைஞனை அணுகி, "இந்த நாட்டில் நாங்கள் அதை அணிவதில்லை," என்று கூறி அவரது தலைப்பாகையைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வாலிபரை தனது முகமூடியை கழற்றச் சொல்லியுள்ளார். பின்னர் அந்த நபர் பாதிக்கப்பட்டவரின் முகம், முதுகு மற்றும் அவரது தலையின் பின்பகுதியில் குத்தியதில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் பயந்த அந்த சீக்கிய இளைஞர், பேருந்தில் இருந்து இறங்கி லிபர்ட்டி அவென்யூ வழியாக ஓட துவங்கிய போது அந்த வாலிபரின் தலையில் இருந்த தலைப்பாகையை அகற்றவும் அந்த நபர் முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். மன்ஹாட்டனில் கொள்ளையடிக்க முயன்ற ஒரு குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநில சிறையில் இருந்த பின்னர், கடந்த ஜூலை 2021ல் தான் பிலிப்பெக்ஸ் நிபந்தனையுடன் பரோலில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

பாதிக்கப்பட்ட அந்த சீக்கிய இளைஞர், கடந்த புதன்கிழமை, தாக்குதலுக்கு உள்ளாகி, "அதிர்ச்சியடைந்து கோபமடைந்து" இருப்பதாகவும், அவர்கள் எந்த நாட்டினர் என்பதை வைத்து யாரும் துன்புறுத்தப்படக்கூடாது என்றும் கூறியுள்ளார். 

சிங்கப்பூரர்கள் கவனத்திற்கு.. இனி காசோலை பயன்படுத்தினால் தனி கட்டணம்.. 7 வங்கிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

click me!