Singapore : இன்றளவும் பல சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் பிற நாட்டு மக்கள், சில நேரங்களில் காசோலைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இனி அப்படி காசோலைகளை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை செய்வதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வருகின்ற நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் இந்த புதிய மாற்றம் அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அக்டோபர் 20ம் தேதி வெளியான தகவலின்படி, ஏழு முக்கிய வங்கிகளின் இணையதளத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான காசோலைக்கும் இந்த புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.
குறிப்பாக S$0.75 முதல் S$3 (45 ரூபாய் முதல் 181 ரூபாய்) வரை இந்த கட்டணம் இருக்கும். மேலும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள 7 வங்கிகள் DBS, UOB, OCBC, சிட்டி பேங்க், HSBC, மேபேங்க் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கிகள் தான். அமெரிக்க டாலர் மதிப்பிலான காசோலைகளுக்கும் US$0.55 முதல் US$3 வரையிலான கட்டணம் விதிக்கப்படும்.
இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு மத்தியில் சைலென்டாக ராணுவ பலத்தை அதிகரிக்கும் இந்தியா!
ஆனால் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, டிசம்பர் 31, 2025 வரை வங்கிகள் இந்தக் கட்டணங்களை தள்ளுபடி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிபிஎஸ் வங்கியின் கூற்றுப்படி, "சில வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு மாறுவதற்கு அதிக நேரம் தேவைப்படலாம்" என்று கூறியது. அதேபோல "விதிவிலக்கான சூழ்நிலைகளில் சில வாடிக்கையாளர்களுக்கு" ஒவ்வொரு வகாரணங்களின் அடிப்படையில் விதிவிலக்குகளைக் கருத்தில் கொள்ளும் என்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கூறியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) மற்றும் சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் சங்கம் (ABS) கடந்த ஜூலை மாதம், சிங்டாலர் மதிப்பிலான காசோலைகளை வழங்குவதற்காக, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகிய இருவருமே, வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க குறைந்தபட்சம் ஏழு வங்கிகளுக்கான நடவடிக்கையை முதலில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டின் பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு ரூ.4.16 லட்சம் பணம் கிடைக்குமா? உண்மை என்ன?