விற்பனைக்கு வருகிறதா அலிபாபா தலைவர் ஜாக் மா நிறுவன பங்குகள்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

By Narendran S  |  First Published Jul 29, 2022, 6:55 PM IST

அலிபாபாவின் தலைவர் ஜாக் மா தனது நிறுவன பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


அலிபாபாவின் தலைவர் ஜாக் மா தனது நிறுவன பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவை சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் தலைவர் ஜாக் மா. இவரை கடந்த 2 ஆண்டுகளாக காணவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்டதன் மூலம் அலிபாபா பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது. ஜாக் மாவும் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். இந்த நிலையில் ஜாக் மாவுக்கும், சீன அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நெருப்புடன் விளையாட வேண்டாம்... அமெரிக்காவை ஏறி அடித்த ஜி ஜின்பிங்... வெலவெலத்துப் போன பிடன்

Latest Videos

undefined

மேலும் தனது நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக சீன அரசு செயல்படுவதாகவும் கூறப்பட்டது. சீனா அரசின் இந்த செயல் பழமைவாதம் என்று ஜாக் மாவும் விமர்சித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைந்தே வாழ்ந்து வந்த ஜாக் மா, ஐரோப்பாவில் இருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், அவருக்கு சொந்தமான ஆண்ட் நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்து இருப்பதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு சொந்தமான ஆண்ட் நிறுவனம் சீனாவின் மிகப்பெரிய மொபைல் வழி ஆன்லைன் பரிவர்த்தனை செயலியான அலிபேவை செயல்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: இலங்கை அரசுக்கு எந்தவிதமான புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி கைவிரிப்பு

இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. ஆண்ட் நிறுவன பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்ட உள்ளதாகவும் ஆண்ட் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளின் உரிமையை ஜாக் மா வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இருந்த போதிலும் இந்த தகவல் குறித்து ஆண்ட், அலிபாபா மற்றும் ஜாக் மா பவுண்டேசன் நிர்வாகிகள் எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருகின்றனர். அதேபோல சீனாவின் மத்திய வங்கியும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!