
இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியா எனப்படும் ஐஎஸ்ஐஎஸ் ஷியா முஸ்லிம்கள் உலகம் முழுவதும் தங்களால் குறி வைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றும் எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.குறிப்பாக ஆப்கானிஸ்தானில் வாழும் ஷியா முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அமெரிக்க நோட்டோ படை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, அந்நாட்டில் ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள் இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியல் கடந்த 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: எப்படியாவது மத வெறுப்பை உருவாக்கி வெறுப்பு அரசியல் செய்ய பாஜக துடிக்கிறது.. பயங்கரமாக எச்சரித்த தயாநிதி மாறன்.
அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் முழுமையாக அகற்றப்படுவார்கள் என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆப்கன் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால், ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் ஆப்கனில் அதிகரித்துள்ளது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி தெற்கு ஆப்கனின் குண்டுஸ் பகுதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மசூதியில் தற்கொலை ப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 47 பேர் உயிரிழந்தனர் 70க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர், அதேபோல் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வடக்கு ஆப்கனிஸ்தானில் உள்ள சயீத் அபாத் என்ற ஷியா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குறைந்தது 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்-கே பொறுப்பேற்றுள்ளது.
இதையும் படியுங்கள்: அய்யோ.. தமிழக மக்களே உஷார்.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப எச்சரிக்கையா இருங்க.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வாராந்திர இதழான அல் நபாவியில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது, அதை பிரபல நியூஸ் ஏஜென்சி காமா பிரஸ் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது, அதில் உலகின் எந்தப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும், அவர்கள் எங்கள் குறியில் இருந்து தப்ப முடியாது, எங்களால் அல்லது எங்கள் கிளை அமைப்புகளால் அவர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவர், குறிப்பாக ஆப்கனில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவர், பாக்தாத் முதல் கோரோசான் வரை இந்த தாக்குதல் தொடரும் என ஐஎஸ்ஐஎஸ் எச்சரித்துள்ளது. இது உலக அளவில் ஷியா முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.