இந்திய நாட்டினுடைய பொருளாதாரமானது வேகமாக மீண்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.
வாஷிங்டன்: இந்திய நாட்டினுடைய பொருளாதாரமானது வேகமாக மீண்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து உலக வங்கி வளர்ச்சிக் குழு கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: கொரோனா நெருக்கடியை மீறி, கடந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு ரூ.6 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது.
இந்த முதலீடு மூலம் உலக முதலீட்டாளர்களுக்கு உகந்த நாடு இந்தியா என்ற அந்தஸ்தை தக்க வைத்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சரக்கு மற்றும் சேவை வரியானது தலா 1 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.
இந்த அம்சமே இந்திய பொருளாதாரம் மிக வேகமாக மீண்டு வருகிறது என்பதற்கான அத்தாட்சி. அடுத்து வரக்கூடிய மாதங்களிலும் இந்தியாவுக்கு ஜிஎஸ்டி வருவாய் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் பேசினார்.