நாங்க தான் குண்டு வச்சோம்… காந்தகார் குண்டுவெடிப்பை ஒத்துக் கொண்ட ஐஎஸ் அமைப்பு…

By manimegalai a  |  First Published Oct 16, 2021, 8:07 AM IST

32 பேரை பலி கொண்ட காந்தகார் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.


காபூல்:  32 பேரை பலி கொண்ட காந்தகார் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

Tap to resize

Latest Videos

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் காந்தகாரில் உள்ள இமாம் பர்கா என்ற மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகை நடந்து கொண்டு இருந்தது.

அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 32 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 100க்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந் நிலையில் 32 பேர் உயிரிழக்க காரணமாக காந்தகார் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

கடந்த வாரமும் வெள்ளிக்கிழமையன்று குந்துஸ் பகுதியில் ஷியா பிரிவு மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் 46 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!