மசூதிக்கு உள்ளே குண்டுவெடித்ததும் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது மசூதி வாயிலிலும் குண்டு வெடித்ததால் பலர் உடல் சிதறி பலியாகினர்.
மசூதிக்கு உள்ளே குண்டுவெடித்ததும் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது மசூதி வாயிலிலும் குண்டு வெடித்ததால் பலர் உடல் சிதறி பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறி முழு நாடும் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர் அந்து பொதுமக்கள் மீதான வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் குந்தூஸ் மாகாணத்தில் ஷியா முஸ்லீம்களின் மசூதியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த தாக்குதலின் ரத்தம் காய்வதற்குள் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
கந்தகார் நகரில் அமைந்துள்ள ஷியா பிரிவினருக்கான மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். பயங்கரச் சத்தத்துடன் குண்டு வெடித்ததும், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். ஆனால் மசூதியின் வாயிலில் அடுத்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதால் அதிலும் பலர் கொல்லப்பட்டனர்.
இரண்டு வெடிகுண்டு தாக்குதலிலும் தப்பிது ஒரு சிலர் வாகன நிறுத்திமிடத்திற்கு சென்றனர். ஆனால் கொஞ்சமும் ஈவு, இறக்கமில்லா பயங்கரவாதிகள், அங்கு வைத்திருந்த வெடிகுண்டையும் வெடிக்கச் செய்தனர். மசூதி வளாகமே உடல்கள் சிதறி போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த கொடூர தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இந்த தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.