தைவானில் 13 மாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 55 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தைவானில் 13 மாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 55 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு தைவானில் உள்ள கயோசியுங் என்ற இடத்தில் 13 மாடி அப்பார்ட்மென்ட் கட்டிடம் ஒன்று இருந்தது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். இதில், 1 முதல் 5 தளங்களில் கடைகள் இயங்கி வந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது.
அதிகாலை என்பதால் கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மேலும், கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவியது. இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 55 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது விசாரணை நடத்தி வருகின்றனர்.