கூறு போட்டு வழங்கப்பட்ட பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு… இதுதான் காரணமாம்…!

By manimegalai aFirst Published Oct 11, 2021, 8:27 PM IST
Highlights

உலகம் முழுவதும் கொரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்ற நிலையில், இந்த விருது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது

மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் உலகின் தலைச்சிறந்த நோபல் பரிசுகள் வழங்கப்படும். இதில் அமைத்திக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் இருந்து அறிவிக்கப்படும். அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 4-ம் தேதி முதல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கோமில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவம், இயற்பியல், வேதியல், அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்ற நிலையில், இந்த விருது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 2021-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டேவிட் கார்ட், ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட் மற்றும் கொய்டோ டபுள்யு.இம்பென்ஸ் ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசின் ஒரு பகுதியை டேவிட் கார்டுக்கும், மறு பாதியை ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. டேவிட் கார்டு பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்தவர். இதே கியூட்டோ இம்பென்ஸ் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தினை சேர்ந்தவர். இவர்களில் டேவிட் கார்டு ஒரு கனேடியன். ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் அமெரிக்க குடிமகன். இதே கியூட்டோ இம்பென்ஸ் டச்சு நாட்டினை சேர்ந்தவர் ஆவார்.

 

click me!