வங்கதேசத்தில் சித்துவேலை செய்த அமெரிக்கா! நடந்தது இதுதான்.. ஷேக் ஹசீனா ஓபன் டாக்!!

By SG Balan  |  First Published Aug 11, 2024, 5:14 PM IST

"எனது மண்ணின் மக்களிடம், 'தயவுசெய்து தீவிரவாதிகளின் கைப்பாவை ஆகிவிட வேண்டாம்' என்று கேட்டுக்கொள்கிறேன்" எனவும் ஹசீனா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


தற்போது இந்தியாவில் வசிக்கும் வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தன்னை ஆட்சியில் இருந்து நீக்கியதில் அமெரிக்காவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“இறந்த உடல்களின் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது என்பதற்காக ராஜினாமா செய்தேன். மாணவர்களின் சடலங்களை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினர். ஆனால் நான் அதை அனுமதிக்கவில்லை. நானே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தேன்.
செயின்ட் மார்டின் தீவிவை விட்டுக்கொடுத்து வங்காள விரிகுடாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அனுமதித்திருந்தால் நான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும்" என்று ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

Latest Videos

undefined

"எனது மண்ணின் மக்களிடம், 'தயவுசெய்து தீவிரவாதிகளின் கைப்பாவை ஆகிவிட வேண்டாம்' என்று கேட்டுக்கொள்கிறேன்" எனவும் ஹசீனா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இரவையும் பகலையும் பிரிக்கும் மெல்லிய கோடு! நாசா வெளியிட்ட பூமியின் அபூர்வமான புகைப்படம்!!

வங்காள விரிகுடாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள செயின்ட் மார்டின் தீவு, காக்ஸ் பஜார்-டெக்னாஃப் தீபகற்பத்தின் தெற்கே சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் வங்காளதேசத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது.

"பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்களின் வீடுகள் தீக்கிறை ஆக்கப்பட்டுள்ளன என்ற செய்திகளைப் பார்க்கும்போது என் இதயம் கண்ணீர் வடிக்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால், எனது தந்தையும் என் குடும்பத்தினரும் பாடுபட்ட உருவாக்கிய தேசத்தின் எதிர்காலத்திற்காக நான் என்றென்றும் உறுதியாக இருக்கிறேன்" எனவும் ஹசீனா கூறியிருக்கிறார்.

ஆகஸ்ட் 5 அன்று ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வங்கதேசத்தில் தற்போது அரசியல் மாற்றம் நடந்துள்ளது. அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீட்டு முறையை அகற்றக் கோரி மாணவர்களின் போராட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, ஹசீனாவின் பாதுகாப்பு குறித்த கவலைகள் தீவிரமடைந்தன. இப்போது அந்நாட்டில் நோபல் பரிசு பெற்ற அறிஞர் முகமது யூசுப் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றுள்ளது.

காசாவை ரத்த பூமியாக்கும் இஸ்ரேல்! பள்ளி, மசூதியில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 93 பேர் பலி!

click me!