மேலாடையின்றி பாடல் பாடிய செரீனா வில்லியம்ஸ் !! நல்ல காரியத்துக்காக இவர் செய்த செயலால் குவியும் பாராட்டு !!

By Selvanayagam PFirst Published Oct 1, 2018, 6:54 AM IST
Highlights

பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாடல் பாடி இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த வீடியோ பதிவுக்காக செரினா வில்லியம்ஸ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலகின் பிரபலங்கள் பல்வேறு காரியங்களை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஐ டச் மைஷெல்ப் என்ற பாடல் வரிகளைப்பாடி, தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து, மார்பகப்புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு செய்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்..

ஆஸ்திரேலியாவின் தி டிவினில்ஸ் 1991 பாடலை அடிப்படையாக வைத்து, இந்தப் பாடல் அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மார்பகப்புற்றுநோய் நெட்வோர் இதற்கு ஆதரவு அளித்துள்ளது.

இது தொடர்பாக தனது  இள்ஸ்டாகிராமில் செரீனா வில்லியம்ஸ்,  இது மார்பகப்புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாதம். உலகளவில் பிரபலம் ஆகிய தி டிவினில்ஸ் பாடலை பதிவு செய்து உங்களுக்கு விழிப்புணர்வு செய்துள்ளோம். ஐ டச் மைஷெல்ப் என்ற பாடல் மூலம் பெண்கள் நாள்தோறும் தங்கள் மார்பகங்களைத் தொட்டுப்பார்த்து மார்பகப்புற்றுநோய் அறிகுறிகளை அறியலாம் என குறிப்பிட்டுள்ளார்..

மேலும் இந்த வீடியோ மார்கப்புற்றுநோயால் இறந்த புகழ்பெற்ற திவா, கிறிஸி ஆம்ப்லெட் ஆகியோரின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் உடல்நலத்தை வலியுறுத்தி பல்வேறு பாடல்களை பாடிய இவர்களுக்காக இதை அர்ப்பணிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஐ டச் மைசெல்ப் என்ற பாடல் ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ் என்ற பெண் எழுதிப் பாடினார். ஆனால், அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப்புற்றுநோயால் 53 வயதில் இறந்துவிட்டார்.

இந்த வீடியோவை இன்ட்ராகிராமில் செரீனா வில்லியம்ஸ் பதிவிட்ட  10 நிமிடத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மார்பகப்புற்று நோய்க்கு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் செரீனா எடுத்துள்ள முயற்சியை அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

click me!