விண்கல் கடலில் விழுந்து கடற்கரையோர நகரங்கள் அழிய வாய்ப்பு….. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…

First Published Dec 14, 2016, 9:48 PM IST
Highlights


விண்கல் கடலில் விழுந்து  கடற்கரையோர நகரங்கள் அழிய வாய்ப்பு….. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…

 

எதிர்காலத்தில் பூமி மீது விண்கலம் மோதுவதற்கான சாத்தியக் கூறுகள்  இருக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமெரிக்க ஊ எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் புவிப்பௌதிகவியல் விஞ்ஞானிகள் கூட்டம் நடைபெற்றது. அதில்  புதிய விண்கலம் ஒன்றை தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்துள்ளனர்.

அந்த விண்கலம் பூமியை நோக்கிவரும் வால் நட்சத்திரம் அல்லது விண்கல் போன்றவற்றை அணு வெடிபொருள்கள் மூலம் தகர்த்து அதன் பாதையை மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தற்போது சுமார் 15 ஆயிரம் விண்கற்கள் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இன்னும் நிறைய விண்கற்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன என்றனர். மேலும் அந்த விண்கற்கள் பூமியுடன் மோதும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்..

ஒரே ஒரு பிரம்மாண்ட விண்கல் கடலில் விழுந்தாலும், காற்றில் பல கிலோ மீட்டர்களுக்கு பெரிய அலைகளை உண்டாக்கி கடற்கரையோர நகரங்களை அழித்துவிடும் என்று எச்சரித்த விஞ்ஞானிகள், இதனை தடுக்க புதிய விண்கலம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றனர்.

 

click me!