அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான விளாடிமிர் புடினின் நண்பர்….டொனால்ட் டிரம்ப் அதிரடி…..

First Published Dec 13, 2016, 4:40 PM IST
Highlights


அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான விளாடிமிர் புடினின் நண்பர்….டொனால்ட் டிரம்ப் அதிரடி…..

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக  ரெக்ஸ் டில்லர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான இவரது தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றவர் டொனால்ட் டிரம்ப். பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டாலும் அமெரிக்க மக்கள் டிரம்பை வெற்றிபெறச் செய்தனர்.

அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனது தலைமையிலான ஆட்சியில் இடம்பெறவுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தேர்வு செய்து வருகிறார்.

அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக  ஜேம்ஸ் மாட்டிஸ் என்பவரை நியமிக்கப் போவதாக கடந்த வாரம்  டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்காவின் புதிய  வெளியுறவுத்துறை அமைச்சராக ரெக்ஸ் டில்லர்சன் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹிலாரி கிளிண்டன், ஜான் கெரி ஆகியோர் வகித்து வந்த முக்கியமான வெளியுறத்துறை இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் பிரபலமான தொழிலதிபரும், எக்ஸான் மொபைல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ள ரெக்ஸ் டில்லர்சன், ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருங்கிய நண்பர் என்பது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!