ரஷ்ய படைகளை விரட்டியடித்துவிட்டோம்... உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்!!

By Narendran S  |  First Published Mar 27, 2022, 3:28 PM IST

ரஷ்ய படைகள் விரட்டியடிக்கப்பட்டுவிட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 


ரஷ்ய படைகள் விரட்டியடிக்கப்பட்டுவிட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று வரை ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் இரு நாடுகளை சேர்ந்த பலரும் இந்த போரில் உயிரிழந்தனர். இருந்த போதிலும் போர் தொடர்ந்து வருகிறது. போர் நீடித்துவரம் நிலையில் எல்லை நகரான டிரோஸ்டியாமேட்ஸை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் வசமாக்கியுள்ளன. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 32 வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய படைகள் விரட்டியடிக்கப்பட்டுவிட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

ரஷ்ய படைகள் கடந்த ஒன்றாம் தேதி கைப்பற்றிய துமி ஓபலாஸ் மாகாணத்தில் உள்ள எல்லை நகரம், டிரோஸ்டியாமேட்ஸை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் வசமாக்கியுள்ளன. அங்கு ரஷ்ய படைகள் விரட்டியடிக்கப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனிடையே மாறியபோல் நகரை தக்கவைக்க தேவையான ஆயுதங்களை வழங்க முன்வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்க தயக்கம் காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். செர்னிஹிவ் அணுமின்நிலைய ஊழியர்கள் குடியிருப்பு பகுதியை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளன.

அப்போது நிகழ்ந்த தாக்குதலில் 3 பேர் கொள்ளப்பட்டன. இந்நிலையில் செர்னிஹிவ் அணுமின்நிலையத்தை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. வடக்கு உக்ரைனில் செர்னிஹிவ் நகரம் ரஷ்ய படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு உள்ளது. அந்த நகரம் மற்றொரு மரியபோல் ஆக மாறும் நிலை உள்ளது. அங்குள்ள மக்கள் குடிநீருக்கும், உணவுக்கும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ரஷ்ய படைகளால் தாக்கப்பட்ட எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் குறித்த செயற்கைகோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.

click me!