russia unhrc vote: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா சஸ்பெண்ட்: அர்த்தமுள்ள செயல்: ஜோ பிடன் வரவேற்பு

By Pothy Raj  |  First Published Apr 8, 2022, 2:48 PM IST

russia unhrc vote: ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் இருந்து, பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடாகிய ரஷ்யாவை சஸ்பெண்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை அர்த்தமுள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வரவேற்றுள்ளார்


ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் இருந்து, பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடாகிய ரஷ்யாவை சஸ்பெண்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை அர்த்தமுள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பாராட்டியுள்ளார்.

மனித உரிமை மீறல்

Latest Videos

undefined

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன, வங்கிச் சேவையான ஸ்விப்ட் முறையைப் பயன்படுத்தவும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் தடை விதித்தன. தற்போது ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் நட்பு வட்டத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையி்ல் உக்ரைனில் தலைநகர் கிவ் நகரில் வீரர்கள் மீது குண்டுமழை பொழியும் அதேநேரத்தில் அப்பாவி மக்களையும் ரஷ்யா ராணுவம் கொன்று குவித்தது. இதற்கு ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்தது, மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்தது.

இந்தியா புறக்கணிப்பு

ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை உரிமையை சஸ்பெண்ட் செய்யக் கோரி கடந்த 7ம் தேதி அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் கிடைத்தன. 58 நாடுகள் வாக்களிக்காமல் இருந்தன. இதில் இந்தியாவில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கிக்கொண்டது.

ஐ.நா.வில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இருக்கும் ஒரு நாட்டின் உறுப்பினர் பதவியைஎந்த அமைப்பிலிருந்தும் எளிதாக பறிக்கவோ நிறுத்தவோ முடியாது. ஆனால் ரஷ்யாவுக்கு மட்டும் அது நடந்துள்ளது

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில்  இருந்து ரஷ்யாவை சஸ்பெண்ட் செய்ததற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வரவேற்றுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

அர்த்தமுள்ள நடவடிக்கை

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை சஸ்பெண்ட் செய்தது சர்வதேச சமூகம் செய்த அர்த்தமுள்ள நடவடிக்கை. விளாதிமிர் புதினின் போர் ரஷ்யாவை எவ்வளவு பரிதாபமான நாடாக மாற்றியிருக்கிறது.

ரஷ்யாவுக்கு எதிராக வாக்குகளைப் பெறுவதற்காக அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டது. ஏனென்றால் ரஷ்யாவின் செயல் ஒட்டுமொத்த, திட்டமிட்ட மனித உரிமை மீறல். 

ரஷ்ய படைகள் போர் குற்றத்தில் ஈடுபட்டன. மனித உரிமைக் கவுன்சிலில் ரஷ்யாவுக்கு இடம் அளிக்கக் கூடாது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பால் இனிமேல், மனித உரிமைக் கவுன்சிலின் பணிகளில் ரஷ்யாவால் பங்கேற்க முடியாது. 

தவறான தகவல்

உக்ரைனில் ரஷ்யா நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், ரஷ்யா  தவறான தகவலை பரப்புகிறது. உக்ரைனில் என்ன நடந்தது என்பதைக் கூற ரஷ்யா மறுக்கிறது. அதனால்தான் ரஷ்யாவின் ஆத்திரமூட்டும், காட்டுமிராண்டத்தனமான உக்ரைனுக்கு எதிரான செயலை அனைத்து நாடுகளும் எதிர்க்கின்றன. உக்ரைனின் துணிச்சலுக்கும், அவர்களின் விடுதலைக்கும் ஆதரவு தெரிவிக்கின்றன.

உக்ரைனில் ரஷ்யா செய்த அட்டூழியங்களுக்கு தேவையான ஆதாரங்களை உலகளவில் திரட்டுவதில்அமெரிக்கா பொறுப்புடன் செயல்படும். ரஷ்யாவின் பொருளதாராத்துக்கு இதுபெரும் அழுத்தத்தைக் கொடுக்கும், சர்வதேசஅரங்கிலிருந்து ரஷ்யா ஒதுக்கப்பட்டுவிட்டது
இவ்வாறு பிடன் தெரிவித்தார்
 

click me!